என் பேரு மீனாகுமாரி பாட்டு ஞாபகம் இருக்கா… அந்த நடிகை இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!
சென்னை: கந்தசாமி படத்தில் என் பேரு மீனாகுமாரி பாடலுக்கு குலுங்கி குலுங்கி டான்ஸ் ஆடிய அந்த நடிகை இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
திரைப்படங்களில் வரும் ஐட்டம் பாடலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த பாடலில் இறங்கி ஆட்டம் போடவும் பல நடிகைகள் இருந்தார்கள்.

அந்த நடிகைகள் வரிசையில் முதல் இடத்தில் இருந்தவர் தான் சில்க் ஸ்மிதா. இவர் இடத்தை இன்று வரை யாராலும் நிரப்ப முடியவில்லை.
நடிகை முமைத் கான்: சில்க் ஸ்மிதாவால் ஈர்க்கப்பட்ட நடிகை முமைத் கான் 2002 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி மூலமாக தான் சினிமா உலகிற்கு வந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து உள்ளார்.
என் பேரு மீனாகுமாரி: கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில், நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே பாடலிலும், விஜய்யின் போக்கிரி படத்தில், என் செல்லப்பேரு ஆப்பிள், கந்தசாமி படத்தில், என் பேரு மீனாகுமாரி உள்பட பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.
மார்க்கெட் இல்லை: மம்முட்டியான், மறந்தேன் மன்னித்தேன், மருதமலை, வில்லு, கந்தசாமி, மம்முட்டியான் உள்ளிட்ட பல படங்களில் கௌரவ வேடங்களில் நடித்து உள்ளார். நடிகை முமைத் கான் வேடங்களில் கடந்த சில வருடங்களாக சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் டல்லடித்து கொண்டு உள்ளார். பின் இடையில் இவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் இவரது பெயர் அடிபட்டு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது.
இணையத்தில் படு ஆக்டிவ்: படங்கள் இல்லாததால் வீட்டில் இருந்து உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். திரைப்படங்களில் தென்படாத முமைத் கான் அவ்வப்போது தனது ரசிகர்களை குஷிப்படுத்த தாறுமாறாக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ முமைத் கான் பார்ப்பதற்கு சற்று குண்டாக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











