twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விருது பெற்ற படம்.. 'என் பெயர் ஆனந்தனில்' இதுவரை சொல்லாத சமூக பிரச்னை.. இயக்குனர் தகவல்!

    By
    |

    சென்னை: உண்மைச் சம்பவங்களை கொண்ட த்ரில்லர் படமாக, என் பெயர் ஆனந்தன் உருவாகி இருக்கிறது என அதன் இயக்குனர் சொன்னார்.

    சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி, தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் உட்பட பலர் நடிக்கும் என் பெயர் ஆனந்தன்.

    கனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசனின் சவீதா சினி ஆர்ட்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணப்பாவின் காவ்யா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    சித்திரம் கொல்லுதடி

    சித்திரம் கொல்லுதடி

    இதை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் 6 அத்தியாயம் படத்தில் இடம்பெற்ற ஆறு அத்தியாயங்களில் ஒன்றான, சித்திரம் கொல்லுதடி படத்தை இயக்கியவர். கதை திரைக்கதை வசனம் இயக்கம், தாயம் ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். அதுல்யா ரவி, நாயகி.

    தேர்வு செய்யாமல்

    தேர்வு செய்யாமல்

    இவர் அடுத்த சாட்டை, நாடோடிகள்-2 ஆகிய படங்களில் நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். த்ரில்லருக்கான வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாமல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொணடு உருவாகியுள்ள த்ரில்லர் இது.

    யாரும் பேசாத பிரச்சனை

    யாரும் பேசாத பிரச்சனை

    'இதுவரை யாரும் பேசியிராத சமூக பிரச்சனையை துணிச்சலாக இந்தப்படம் பேசி இருப்பதால் நிச்சயம் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும். .செம்பல் சர்வதேச திரைப்பட விழா, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச திரைப்பட விழா
    மற்றும் தென் கொரியாவில் நடைபெற்ற SEE சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை இந்தப்படம் பெற்றுள்ளது.

    Recommended Video

    A.R. Rahman excited Tweet on Ponniyin Selvan | Maniratnam | Ilaiyaraja
    ஸ்பெஷல் ஜூரி

    ஸ்பெஷல் ஜூரி

    நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவில் ஸ்பெஷல் ஜூரி விருதையும் பெற்றது. இது தனித்துவமான தமிழ்ப்படமாக இருக்கும் என்கிறார் ஸ்ரீதர் வெங்கடேசன். இதில் புதுமுயற்சியாக, க்ளைமாக்ஸுக்கு முன் 11 நிமிட பாடல் காட்சி இடம்பெறுகிறதாம்.

    English summary
    Director Sridhar Venkatesan has said that his film En peyar Anandan is based on real life incidents.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X