பெற்றோர் இறப்பிற்கு கூட போகாத ராஜ்கிரண்...பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை: நடிகர் ராஜ்கிரண் தனது பெற்றோர் இறப்பிற்கு கூட போகாத கல் நெஞ்சுக்காரர் என்று சினிமா பிரபலம் ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார்.

1954 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை என்ற கிராமத்தில் பிறந்த ராஜ்கிரண், 16 வயதிலேயே வேலை செய்ய சென்னைக்கு வருகிறார்

எங்கெங்கோ வேலை தேடிப் பிறகு, சினிமா விநியோக கம்பெனி ஒன்றில் 4.50 ரூபாய்க்கு தினக்கூலியாக வேலை செய்கிறார்.

En Rasavin Manasile Actor Rajkiran did not even go to the death of his parents

நடிகர் ராஜ்கிரண்: ராஜ்கிரண் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த என்பது பலருக்கும் தெரியாது. சினிமா கம்பேனியில் வேலை செய்து கொண்டு இருந்த ராஜ்கிரண் சினிமா விநியோகஸ்தராக மாறினார். இதன் மூலம் அவர் முதல் முதலாக ஒரு படத்தை விநியோகம் செய்தார். இதையடுத்து, ராஜ்கிரன் அவர்கள் நடிகர் ராமராஜனை வைத்து ராசாவே உன்னை நம்பி என்ற படத்தை தயாரித்தார். அவரது தயாரித்த முதல் திரைப்படமே சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியின் மூலம் ராஜ்கிரண் தயாரிப்பு நிறுவனத்தின் மீது ஒரு மிகப்பெரிய நம்பிக்கை உண்டானது.

ராசாவின் மனசுலே: படங்களை தயாரித்துக் கொண்டிருந்த ராஜ்கிரண் மீனாவுடன் இணைந்த என் ராசாவின் மனசுலே என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் முரட்டுத்தனமாக உடம்புடன், லுங்கியை ஏற்றி கட்டிக்கொண்டு சும்மா அட்டகாசமாக முதல் படத்திலேயே நடித்திருந்தார். முதல் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது.

தனுஷின் பா பாண்டி: அதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த ராஜ்கிரண், திடீரென சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். இதையடுத்து தனுஷின் பா பாண்டி படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படம் சிறப்பாக ஓடி இவருக்கு பல விருதுகளை பெற்றுத்தந்தது. தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

பெற்றோர் இறப்பிற்கு கூட போகல: ராஜ்கிரண் தனது பெற்றோர் இறந்த போது கூட சொந்த ஊருக்கு போகவில்லை என்று சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார். ராஜ்கிரணின் சொந்த ஊரான கீழக்கரையில் அவரது வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில், அவரது முன்னாள் மனைவியும் மகளும் இருக்கிறார்கள். தனது சொந்த ஊரான கீழக்கரை ஊருக்கு சென்றே சுமார் 25 வருடங்கள் ஆகிவிட்டன. அவரது பெற்றோர்கள் இறப்பிற்கு கூட ராஜ்கிரண் அவர்கள் வரவில்லை என்று கூறினார். இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X