twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆபாச படங்களை வைத்து மிரட்டும் ஆண்களுக்கு சவுக்கடி... அப்ளாஸை அள்ளும் 'என் உடம்பு' குறும்படம்!

    |

    சென்னை: பெண்களின் உடம்பை பெண்களுக்கு எதிராக பயன்படுத்துப்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் உருவாகியுள்ள என் உடம்பு குறும்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    இயக்குநர் எர்த்லிங்க் கவுசல்யா இயக்கியுள்ள குறும்படம் என் உடம்பு. சுமார் 17 நிமிடம் உள்ள இந்த குறும்படம் என் உடம்பு. துணிக்கடை ட்ரையல் ரூம்மில் உடை மாற்றும் ஒரு பெண்ணை தெரியாமல் படம்பிடித்து பணம் பறிக்கும் இளைஞர்களை அந்தப் பெண் எப்படி எதிர்கொள்கிறார்? அந்த பிரச்சனையை எப்படி கையாள்கிறார் என்பதை இந்த குறும்படத்தின் கதை.

    வெறும் சட்டையுடன் ஸ்டைலா ஹலோவீன் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்!வெறும் சட்டையுடன் ஸ்டைலா ஹலோவீன் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்!

    ஒரு பெண்ணின் உடலை அவருக்கு எதிராக பயன்படுத்தி வெறுக்க வைத்து வெட்கப்பட வைத்து இறுதியில் அவரை தற்கொலைக்கு தூண்டிவிடும் அளவுக்கு பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    எதிராக செயல்படும் கூட்டம்

    எதிராக செயல்படும் கூட்டம்

    ஹோட்டல்களில் பெண்கள் குளிக்கும் வீடியோக்கள், துணிக்கடை ட்ரையல் ரூம்மில் பெண்கள் உடை மாற்றும் வீடியோக்கள், காதல் முறியும் போது நெருக்கமாக இருந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் என ரகம் ரகமாக பெண்களின் உடலை வைத்தே அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது ஒரு கூட்டம்.

    பொட்டில் அடித்தது போல்

    பொட்டில் அடித்தது போல்

    இதுபோன்ற வீடியோக்கள் மற்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோக்கள் என இணையத்தில் வெளியிடப்பட்ட வீடியோக்களால் பள்ளி, கல்லூரி மாணவிகள் மட்டுமின்றி திருமணம் ஆன பெண்கள் பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பலவற்றை கேள்விப் பட்டிருக்கிறோம். இந்நிலையில் அதுபோன்ற சூழ்நிலையை பாதிக்கப்பட்ட பெண் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை பொட்டில் அடித்தது போல் கூறியுள்ளார் எர்த்லிங் கவுசல்யா.

    நிச்சயம் பார்க்க வேண்டிய படம்

    நிச்சயம் பார்க்க வேண்டிய படம்

    மேலும் இந்த குறும்படத்தின் மூலம் பெண்களின் உடம்பை அவர்களுக்கு எதிராக பயன்படுத்தி பணம் பறிக்கும் திருட்டு கூட்டத்திற்கும் செமயான சவுக்கடி கொடுத்துள்ளார் எர்த்லிங் கவுசல்யா. படத்தில் நடித்துள்ள செம்மலர் அன்னம் சிறு சிறு உணர்வுகளையும் சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார்.தோழியாக நடித்துள்ள ஆனந்தி ஜெயராமன் என மற்ற பாத்திரங்கள் மற்றும் வசனங்கள் என எல்லாமே பாராட்டும் வகையில் உள்ளது. இந்தப் படம் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

    17 நிமிட குறும்படம்

    ஒரு ஆண் ஒரு பெண்ணை எப்படி பார்க்க வேண்டும்? ஒரு பெண் தன்னை எப்படி பார்க்க வேண்டும்? இதுபோன்ற சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்பதை 17 நிமிட குறும்படத்தில் முடிந்தவரை அழுத்தமாகவும் ஆழமாகவும் சொல்லியிருக்கிறார்கள். யூட்யூட்பில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

      English summary
      En Udambu Short film gets applause from fans. Earthling Kausalya has directed the short film.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X