En uyir thozhan Babu: 20ஆண்டுகளாக படுத்த படுக்கை.. என் உயிர் தோழன் பாபு உயிரிழந்தார்!

சென்னை: 20 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த என் உயிர் தோழன் பாபு இன்று உயிரிழந்தார்.

கடந்த 1990ம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான படம் தான் என் உயிர் தோழன்.

இந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபுவை ஹீரோவாக பாரதி ராஜா அறிமுகப்படுத்தினார். அரசியல் கதைகளம் கொண்ட இந்த படத்தில் தர்மா என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

en uyir thozhan movie hero babu passed away

என் உயிர் தோழன் பாபு: என் உயிர் தோழன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாபுக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்து, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகனாக அறியப்பட்ட பாபு. தொடர்ந்து விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி, தாயம்மா பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருந்தார்.

படுத்த படுக்கையாக இருந்த: 4 படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய பாபு தனது ஐந்தாவது படத்தில் தனது திரை வாழ்க்கையையே தொலைத்துவிட்டார். மனசார வாழ்த்துங்களேன் என்ற படத்தின் சண்டை காட்சியின் போது, அவரது முதுகெலும்பு உடைந்து நொறுங்கியது. அதன்பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாபு, கடந்த 20 வருடங்களாக படுத்த படுக்கையாகவே இருந்தார்.

இன்று உயிரிழந்தார்: பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த பாபுவிற்கு உடல்நிலை கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காலையில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் தற்போது என் உயிர் தோழன் பாபு உயிரிழந்தது திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X