Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அசுரனை வீழ்த்திய எனை நோக்கிப் பாயும் தோட்டா.. முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
சென்னை: மூன்று ஆண்டுகள் கழித்து தாமதமாக வெளியானாலும், எனை நோக்கிப் பாயும் தோட்டாவிற்கு கொஞ்சம் கூட தியேட்டரில் கூட்டம் குறையவில்லை.
தனுஷ் ரசிகர்களின் அதிகப்படியான அன்பினால், சென்னையில் முதல் நாளில் 74 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் முதல் நாளில் 54 லட்சம் மட்டுமே வசூலித்த நிலையில், எனை நோக்கிப் பாயும் தோட்டா அதனை மிஞ்சியுள்ளது.
தியேட்டரில் ஆரவாரம்
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசி குமார் நடிப்பில் நேற்று வெளியான எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்திற்கு தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அசுரன் வெற்றியைத் தொடர்ந்து எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தையும் மாபெரும் வெற்றி பெற வைக்க தனுஷ் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர்.
சென்னை வசூல்
தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா ரொமான்டிக் மற்றும் ஆக்ஷன் த்ரில்லராக வெளியாகியுள்ளது. சென்னையில் முதல் நாள் வசூலாக சுமார் 74 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக, பாக்ஸ் ஆஃபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தமிழ்நாட்டில்
சென்னையில் 74 லட்சம் ரூபாய் வசூலை ஈட்டியுள்ள தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் தமிழ்நாட்டில் மொத்த வசூலாக 6 முதல் 7 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மத்த ஏரியாக்களில்
கேரளாவிலும் அசுரன் திரைப்படத்தை விட எனை நோக்கிப் பாயும் தோட்டா முதல் நாளில் நல்ல ஓபனிங் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் தனுஷ் ரசிகர்கள் எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அசுரனை வீழ்த்தியது
அக்டோபரில் வெளியான அசுரன் படம் முதல் நாளில் 54 லட்சம் ரூபாய் வசூலித்திருந்த நிலையில், எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் முதல் நாளில் சென்னையில் 74 லட்சம் ரூபாய் வசூலித்து அசுரன் முதல் நாள் வசூலை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
|
வடசென்னை தான் டாப்
தனுஷ் படங்களிலேயே இதுவரை முதல் நாள் வசூலில் வடசென்னை படம் தான் முதலிடத்தில் இருக்கிறது. சென்னையில் வடசென்னை படம் முதல் நாளில் மட்டும் சுமார் 82 லட்சம் வசூல் செய்துள்ளது. தற்போது எனை நோக்கிப் பாயும் தோட்டா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
வீக்கெண்ட் வசூல்
3 ஆண்டுகள் கழித்து வந்தாலும், காலாவதி ஆகாமல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது எனை நோக்கிப் பாயும் தோட்டா, படத்திற்கு கிடைத்துள்ள பாசிட்டிவ் விமர்சனங்களால், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தியேட்டரில் கூட்டம் அலைமோதும் என்றும், நிச்சயம் முதல் வார வசூல் தமிழ்நாட்டில் 20 முதல் 25 கோடி வரை வசூலாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
-
அறிவு ஜீவியா? அரைவேக்காடா?.. பிஸ்மி போட்ட வீடியோ..ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
-
வாயில் சோறு.. கணவர் பாட காதை பொத்திக் கொண்டு.. நிறைமாத கர்ப்பிணி அமலா பாலின் லேட்டஸ்ட் வீடியோ!
-
இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேனே..மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!