வரவிருக்கிறது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் 20 நொடி ப்ரொமோ வீடியோ

Recommended Video

D40 Dhanush Title-'Suruli'| latest update | Dhanush 40| karthick Subburaj

சென்னை: நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யபடாமல் கிடப்பில் இருக்கும் இயக்குனர் கௌதம் மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷன் தன் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மூலம் வெளியிடுகிறார் .

'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகிறது. படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார், அஸ்வின் குமார், செந்தில் வீராசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்து உள்ளார் .

Enai Noki Paayum Thota movies 20 seconds promo release!

2016 மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்கிய இப்படம் 2016 செப்டம்பரில் ஏறத்தாழ முடிவடைந்தது. இதற்கு பிறகு தயாரிப்பு ரீதியில் பிரச்சினை ஏற்பட்டது. இயக்குனர் கௌதம் மேனன் நடிகர் சீயான் விக்ரமை வைத்து 'துருவ நட்சத்திரம்' படத்தை இயக்க சென்று விட்டார், அதனால் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் அரையும் குறையுமாகவே முடிந்திருந்தது. இயக்குனர் கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தையும் முழுவதுமாக முடிக்க முடியாமல் திணறினார். இதே நேரத்தில் கார்த்திக் நரேனின் 'நரகாசூரன்' படத்தையும் தயாரித்து வந்தார் கௌதம் மேனன். பல பிரச்சனைகளில் இருந்த கௌதம் மேனனால் நரகாசூரன் படத்தை கவனிக்க முடியவில்லை .

Enai Noki Paayum Thota movies 20 seconds promo release!

இதற்கிடையில் கௌதம் மேனனுக்கும் கார்த்திக் நரேனுக்கும் சில மனக்கசப்பு ஏற்பட்டது. அதன் வெளிபாடு ட்விட்டரில் அவர்கள் இருவரும் போட்ட சண்டை அந்த பிரச்சினையை மக்கள் மத்தியில் காட்டியது. இதன் பிறகு கௌதம் மேனன் கிடைக்கும் இடைவெளிகளில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பை கொஞ்சம் கொஞ்சமாக முடித்து வந்தார். அப்போதும் படத்தை அவரால் வெளியிட முடியவில்லை .

Enai Noki Paayum Thota movies 20 seconds promo release!

ஐசரி கணேஷனின் தங்கை மகன் 'வருண்' நடித்துள்ள 'ஜோஸுவா' படத்தை இயக்கும் போது ,ஐசரி கணேஷனிடம் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை நீங்கள் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று கௌதம் மேனன் கேட்டு கொண்டதை அடுத்து, படத்தை பார்த்த ஐசரி கணேஷ், வெளியிட சம்மதம் தெரிவித்தார். அதனையடுத்து, 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் இம்மாதம் 29 ஆம் தேதி வெளியாகிறது.

Enai Noki Paayum Thota movies 20 seconds promo release!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X