தனுஷ் ரசிகர்களுக்கு சந்தோச செய்தி... எனை நோக்கி பாயும் தோட்டா செப். 6ல் படம் ரிலீஸ்

சென்னை: கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ட்ரெயிலர் வெளியான அரைமணி நேரத்தில் ஹிட் ஆகியுள்ளது.

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படம் தான் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த திரைப்படத்தில் நடிகை மேகா ஆகாஷ் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதுவே நடிகை மேகா ஆகாஷுக்கு முதல் திரைப்படம். தனுஷ் மற்ற படங்களில் நடித்தது போல் இல்லாமல், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எனை நோக்கி பாயும் தோட்டா

எனை நோக்கி பாயும் தோட்டா

நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டே வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனாலும் வெளியாகும் தேதி இழுபறியாகவே இருந்து வந்தது.

கவுதம் மேனன்

கவுதம் மேனன்

இயக்குநரின் பணப்பிரச்சனை காரணமாகவே இந்தப் படம் பாதியில் நிறுத்தப்பட்டதாக பரவலாக பேச்சு எழுந்தது. அதுமட்டுமின்றி நடிகர் தனுஷ் அந்த சமையத்தில் பல படங்கள் நடித்து வந்ததால் இந்தப் படத்திற்கு போதிய கால்ஷீட் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் இயக்குனர் கவுதம் மேனனும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை இயக்கி முடித்தார்.

ட்ரைலர் ரிலீஸ்

ட்ரைலர் ரிலீஸ்

இந்நிலையில் இப்போது என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் வெளிவரும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பொது இந்த திரைப்படத்தின் புது ட்ரைலர் கவுதம் மேனனின் ஒன்றாக என்டெர்டெய்ன்மெண்ட் இணையத்தளத்தில் பிரபலமாகி வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் இணையதளத்தில் வெளியான அரை மணிநேரத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

செப்டம்பர் 6ல் ரிலீஸ்

செப்டம்பர் 6ல் ரிலீஸ்

அதுமட்டுமின்றி, இந்த திரைப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளிவர இருக்கிறது என்று அந்த ட்ரைலரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். இந்த திரைப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இசை பாடல்கள்

இந்த திரைப்படத்தில் நடிகைகள் சுனைனா, சஞ்சனா சாரதி மற்றும் நடிகர்கள் சசிகுமார், அஸ்வின் குமார், செந்தில் வீராசாமி, தீரஜ் கார்த்திகேயன், சந்தோஷ் கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசைமைப்பாளர் டர்புக சிவா இசைமைத்துள்ளார். இவரின் இசையில் அனைத்து பாடல்களுமே உயிர்த்துடிப்புடன் உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X