குறி பார்த்து சுடத் தவறிய தோட்டா.. கெளதம் மேனனே காரணம்.. தயாரிப்பாளர் அப்செட்!
சென்னை: என்னை நோக்கி பாயும் தோட்டா பட தோல்விக்கு இயக்குனர் கௌதம் மேனனின் கவனக்குறைவே காரணம் என்று தயாரிப்பாளர் ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்
எப்போது வரும் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட என்னை நோக்கி பாயும் தோட்டா கடந்த 27ஆம் தேதி வெளிவந்தது. இதனால் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். படம் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் ஹிட்டாகி அதிக அளவில் பேசப்பட்டது.

என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற பெயரே செம மாஸான பெயர் என்பதால் படம் செம சூப்பர் ஹிட்டாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மேலும் பல, ஹிட் படங்களை கொடுத்த கௌதம் மேனன் மற்றும் தனுஸ் ஆகியோரின் மெகா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று பெரிதும் எதிர்பார்த்தனர்.
ஆனால் நினைத்தபடி வெற்றி பெறாததால் ஏமாற்றமடைந்த தயாரிப்பாளர் கே.ராஜன் இந்த படம் தோல்வி அடைய இயக்குனர் கௌதம் மேனனின் கவனக்குறைவும் சரியில்லா திட்டமிடலும் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர் . பல வெற்றிப்படங்களை தந்த அவரால் ஏன் இப்படத்தை வெற்றிப்படமாக்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

எல்.கே.ஜி ,கைதி மற்றும் அசுரன் போன்ற குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட பட்டங்களே மக்களால் ரசிக்க பட்டு மிகபெரிய வெற்றியடைந்து வியாபார ரீதியிலும் நல்ல பெயரை பெற்றுத்தந்தள்ளன. ஆனால், இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு தற்போது ரிலீஸான என்னை நோக்கி பாயும் தோட்ட படம் மிக பெரிய பேசப்படாததற்கு என்ன காரணம் என்ற புரியவில்லை கூறிய தயாரிப்பாளர் கே.ராஜன் இதற்கு கௌதம் தான் முழுக்க காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











