'எனக்கு இன்னொரு பேர் இருக்கு: 'தலதளபதி' ரசிகர்களுக்கு ஜி.வி.பிரகாஷின் விருந்து

By Manjula

சென்னை: ஜி.வி.பிரகாஷின் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு டீசர்' சற்றுமுன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, கருணாஸ், நிரோஷா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'.

'டார்லிங்' வெற்றிக்குப்பின் இயக்குநர் சாம் ஆண்டன்-ஜி.வி.பிரகாஷ் மீண்டும் இணைந்திருக்கும் இப்படத்தை, லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

'திரிஷா இல்லேன்னா நயன்தாரா' வெற்றிக்குப்பின் ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி 2 வது முறையாக இப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

இதுதவிர ஜி.வி.பிரகாஷின் 'டார்லிங்', 'திரிஷா இல்லேன்னா நயன்தாரா' படங்களில் நடித்த மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று வெளியான டீசர் தங்களை மிகவும் கவர்ந்திருப்பதாகவும், எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஜி.வி.பிரகாஷுக்கு மற்றொரு வெற்றிப்படமாக மாறும் எனவும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கழுத்தில் ஜானி பெயர் பொறித்த செயின், கையில் நீளக்கத்தி என்று டீசரில் ஜி.வி.பிரகாஷ் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

டீசரில் வேதாளம் படத்தின் தெறிக்க விடலாமா? தெறி படத்தின் தெறி பேபி வசனங்களைப் பயன்படுத்தி விஜய்,அஜீத் ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளனர்.

இதனால் விஜய், அஜீத் ரசிகர்களும் டீசருக்கு தங்கள் ஆதரவை வாரிவழங்க தற்போது #enakkuinnoruperirukku ஹெஷ்டேக் தேசியளவில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X