பென்குயின் டாக்குமெண்டரி எடுத்தவர் வெற்றி மாறனின் தீவிர ரசிகர்னு தெரியுமா? ஆஸ்காரில் நடந்த முரட்டு சம்பவம்

சென்னை: சமூக வலைத்தளத்திற்குள் நுழைந்தாலே பென்குயின் புராணங்களாக தான் இருக்கிறது. இணையவாசிகள் சிலரோ, நான் தான் அந்த பென்குயின் என்று சொல்லிக் கொண்டு இருக்க, மேலும் சிலரோ, அந்த பென்குயின் மாதிரி தைரியமான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும் என்று எல்லாம் பேசி வருகிறார்கள். Encounters at the End of the World என்ற இந்த ஆவணப் படத்தை எடுத்த இயக்குநர், வெர்னர் ஹெர்ஸாக். இவர் உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர். இவர் இயக்குநர் வெற்றி மாறனின் ரசிகர் என்பது பலருக்கும் தெரியாத கதை.

நடிகர் தனுஷ் தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான படம் விசாரணை. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. படத்தின் கதை, லாக்கப் என்ற புத்தகத்தை மையமாக கொண்டது.

Encounters at the End of the World Director Werner Herzog Turns Vetrimaaran Fan At Oscars

ஆஸ்கர்: இந்த படம் 2017ஆம் ஆண்டு ஆஸ்கருக்கு தேர்வாகி இருந்தது. எப்படியும் படம் பந்தயம் அடிக்கும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் படம் இறுதி பரிந்துரைக்கு தேர்வாகவில்லை. படத்திற்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என்றாலும், தனக்கு மிகவும் மனநிறைவான சம்பவம் ஒன்று நடைபெற்றதாகவும் இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்திருந்தார். அதாவது, விசாரணை படத்தை பார்க்க இயக்குநர் வெர்னர் ஹெர்ஜாக்கை நாங்கள் அழைத்திருந்தோம். நாங்கள் அவரை அழைத்ததும், பலரும் எங்களிடம் சொன்னது, " இவரை எதுக்கு கூப்பிட்டீங்க. அவருக்கு படம் பிடிக்கலனா எழுந்து போய்விடுவார். அதன் பின்னர் அதுவே உங்கள் படத்திற்கு மோசமான விமர்சனம் போல மாறிவிடும்" என்று தெரிவித்தார்கள்.

பெருமிதம்: ஆனால் எங்களுக்கு அது குறித்து எல்லாம் சிந்தனையே இல்லை. என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம் என்று இருந்தோம். வெர்னர் ஹெர்ஸாக் விசாரணை படத்தை முழுவதுமாக பார்த்து விட்டு, இன்று இரவு என்னால் தூங்கவே முடியாது. அதற்கு காரணம் உங்கள் படம் என்று கூறினார். எனக்கு இது மிகவும் நிறைவானதாக உள்ளது. நான் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் வெர்னர் ஹெர்ஸாக் படங்களைப் பார்த்துவிட்டு, விடிய விடிய டீ கடையில் டீ குடித்துவிட்டு, அவரது படங்கள் குறித்து பேசி உள்ளேன். அப்படி இருக்கையில் எனது படத்தைப் பார்த்துவிட்டு, அவருக்கு இரவு தூக்கம் வராது என்றதும் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி ஆகிவிட்டது" என்று தெரிவித்திருந்தார்.

கவனிக்கவேண்டிய ஒன்று: அப்படி வெற்றி மாறனின் ரசிகரான வெர்னர் ஹெர்ஸாக் இயக்கிய ஆவணப்படம் தான், Encounters at the End of the World என்ற ஆவணப்படம். உலகமே கொண்டாடும் இந்த ஆவணப்படத்தை எடுத்தவர் நம்மூர் வெற்றி மாறனின் ரசிகர் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X