Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வேற லெவல் பாக்ஸ் ஆபிஸ் வருமே.. மாஸ்டர் இந்தி ரீமேக்கில் நடிக்க அந்த ஹீரோவிடம் பேச்சுவார்த்தை!
மும்பை: தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது.
கொரோனா பரவலுக்கு பிறகு தியேட்டர் பக்கம் தலை வைத்து படுக்காத ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு வரவழைத்து, ஒட்டுமொத்த இந்தியா சினிமா துறைக்கும் பேருதவி செய்தது.
நடிகர் மாதவனின் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பெற்றுள்ள எண்ட்மோல் ஷைன் நிறுவனம் பாலிவுட்டின் கான் நடிகருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
மாஸ்டர் பிளாஸ்டர்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ், பூவையார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
பெரிய பட்ஜெட் படங்கள்
மாஸ்டர் படம் தியேட்டரில் வெளியாகி மக்கள் கூட்டத்தை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வந்த நிலையில், கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏகப்பட்ட பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்த நிறுவனங்கள் தங்களின் படங்களின் ரிலீஸ் தேதியை அறிவித்தன.
விஜய் தி மாஸ்டர்
மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் காலதாமதம் ஆன நிலையில், இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு விஜய் தி மாஸ்டர் என்கிற பெயரில் அந்த படம் பாலிவுட்டிலும் ஒரே சமயத்தில் வெளியானது. மாஸ்டர் படத்தின் கதை பிடித்துப் போன நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிறுவனம் அதனை இந்தியில் நேரடியாக ரீமேக் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளது.
பிக் பாஸ் நிறுவனம்
பிக் பாஸ் நிகழ்ச்சிகளை இந்தியா மற்றும் உலக நாடுகளில் நடத்தி வரும் எண்ட்மோல் ஷைன் நிறுவனம் மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கி உள்ளது. பாலிவுட்டில் முன்னணி ஹீரோவை வைத்து மாஸ்டர் படத்தை ரீமேக் செய்ய தீவிரமாக வேலை செய்து வருகிறது எண்ட்மோல் ஷைன் நிறுவனம்.
சல்மான் கானிடம்
பாலிவுட்டின் முன்னணி கான் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானை வைத்து மாஸ்டர் படத்தை உருவாக்க எண்ட்மோல் ஷைன் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாகவும், மாஸ்டர் கதை சல்மான் கானுக்கும் பிடித்துப் போயுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய விரைவிலேயே, சல்மான் கான் மாஸ்டர் படத்தில் நடிக்க உள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தி பிக் பாஸ்
14 சீசன்களாக நடைபெற்று வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் சல்மான் கான். எண்ட்மோல் ஷைன் நிறுவனத்துடன் அவருக்கு இருக்கும் நெருக்கமான நட்பு காரணமாக நிச்சயம் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சல்மான் கான் மட்டும் மாஸ்டர் படத்தில் நடித்தால், வேற லெவல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குவியும் என்பது நிச்சயம்.