»   »  எந்திரன் 2: உள்ளே வந்த அமிதாப்....கண்டிஷனுடன் வெளியே நிற்கும் அர்னால்டு

எந்திரன் 2: உள்ளே வந்த அமிதாப்....கண்டிஷனுடன் வெளியே நிற்கும் அர்னால்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்துடன் எந்திரன் 2 படத்தில் இணைந்து நடிக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் நான் சொல்லும் கண்டிஷன்களுக்கு ஒப்புக் கொண்டால் தான் உள்ளே வருவேன் என்று அர்னால்டு வெளியே நின்று கொண்டிருக்கிறார்.

எந்திரன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் 2 வது பாகத்தை முன்பைவிட பிரமாண்டமாகவும், அதிக பொருட்செலவிலும் எடுக்கும் முயற்சியில் ஷங்கர் இறங்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சனும், வில்லனாக ஹாலிவுட் அர்னால்டும் நடிக்கவிருக்கின்றனர்.

எந்திரன் 2

எந்திரன் 2

எந்திரன் படத்தின் 2 வது பாகத்தை எடுப்பதில் இயக்குநர் ஷங்கர் ஆர்வம் காட்டி வருகிறார். ரஜினி, எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கும் இப்படத்தில் வில்லனாக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். டிசம்பர் மாதம் 12ம் தேதி ரஜினியின் பிறந்த நாளில் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடவிருக்கின்றனர். இதற்கிடையில் படத்தின் முன்னோட்ட வேலைகளில் ஷங்கர் தற்போது பிஸியாக இருக்கிறார்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

எந்திரன் படத்தின் முதல் பாகம் பாலிவுட்டில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை,எனவே இந்தப் படத்தில் முக்கியமான பாலிவுட் நடிகர் ஒருவரை நடிக்க வைக்க ஷங்கர் திட்டமிட்டிருந்தார். அமீர்கான் மற்றும் ஹிருத்திக்ரோஷன் மறுத்த நிலையில் அமிதாப் பச்சன் இதில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

சந்தோஷத்துடன்

சந்தோஷத்துடன்

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் இந்த வாய்ப்பை மிகவும் சந்தோஷத்துடன் அமிதாப் ஏற்றுக் கொண்டுள்ளாராம். ரஜினியும்,அமிதாப்பும் நல்ல நண்பர்கள் என்பதும் அந்த கனூன் மற்றும் கேர்ஆப்டர் படங்களில் இருவரும் இணைந்து நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அர்னால்டு

அர்னால்டு

இந்தப் படத்தை ஹாலிவுட் தரத்தில் எடுக்கவிருக்கும் ஷங்கர் அதற்காக ஹாலிவுட் நடிகர் அர்னால்டை இந்தப் படத்தில் நடிக்க வைக்க விரும்புகிறார். இதற்காக சுமார் 100 கோடிகளை அவருக்கு தாரை வார்க்கவும் ஷங்கர் தயங்கவில்லை.

ஏகப்பட்ட நிபந்தனைகள்

ஏகப்பட்ட நிபந்தனைகள்

இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த அர்னால்டு இதுவரை ஏகப்பட்ட நிபந்தனைகளை வித்திருக்கிறார். மொத்தமாக தனது கால்ஷீட்டை 50 தினங்களுக்கும் சற்று அதிகமாகவே அர்னால்டு கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் படத்தின் நாயகன் ரஜினி 2016 ம் ஆண்டு முழுவதையும் எந்திரன் 2 விற்காக ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்.

புதிய நிபந்தனை

புதிய நிபந்தனை

இந்த நேரத்தில் இயக்குநர் ஷங்கரிடம் அர்னால்டு தற்போது புதிதாக நிபந்தனை ஒன்றை விடுத்திருக்கிறாராம். அதாவது எந்திரன் 2 படத்தின் கதையை ஹாலிவுட்டில் இருக்கும் திரைக்கதை அமைப்பினரோடு இணைந்து திரைக்கதையை மாற்றி அமைக்கும்படி தெரிவித்திருக்கிறார் அர்னால்டு. அவ்வாறு மாற்றும் திரைக்கதை அமைப்பு தனக்கு பிடிக்கும் பட்சத்தில் மட்டுமே ஒப்பந்தமாவதாகவும் ஷங்கரிடம் தெரிவித்திருக்கிறார் அர்னால்டு.

என்னை செய்யப் போகிறார்

என்னை செய்யப் போகிறார்

எல்லாம் ஒருவழியாக முடிந்தது என்று நினைத்த ஷங்கருக்கு அர்னால்டின் இந்த நிபந்தனை தற்போது புதிய குழப்பத்தை விளைவித்திருக்கிறது. அர்னால்டின் நிபந்தனைக்கு ஷங்கர் ஒத்துக் கொள்வாரா அல்லது வேறு யாரையேனும் ஒப்பந்தம் செய்வாரா? இந்த கேள்விக்கான விடை என்னவாக இருக்கும். வழக்கம் போல பொறுத்திருந்து பார்க்கலாம்.

எந்திரன் 2 வில் ரஜினியை விட அர்னால்டின் சம்பளம் அதிகம் என்பதும், ரஜினி படத்தில் நடிக்கும் ஒருவர் ரஜினியை விட அதிகமாக சம்பளம் வாங்குவதும் இதுவே முதல் முறையாகும்.

English summary
Bollywood Megastar Amitabh Bachchan to Join Hands With Rajini in Endhiran 2. This Movie Official Announcement may be Released on Rajini's Birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil