twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எந்திரன் 2 படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம் - ஷங்கர்

    By Manjula
    |

    சென்னை: "எந்திரன் 2 படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம் மிகவும் ஆவலாக இருக்கிறேன்" என்று இயக்குநர் ஷங்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

    இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் எந்திரன் 2 படத்தில் ரஜினியுடன் இணைந்து எமி ஜாக்சன் நடிக்கிறார். ஷங்கர் இயக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    Endhiran 2 Shooting Starts Today

    இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக எந்திரன் 2 உருவாகவிருக்கிறது. சமீபத்தில் படத்தின் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு மற்றும் பிற விவரங்களை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

    இந்நிலையில் முதன்முறையாக இப்படத்தைப் பற்றி இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். " நாளை முதல் எந்திரன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம். மிகவும் ஆவலாக இருக்கிறேன்" என்று நேற்று இரவு ஷங்கர் ட்வீட் செய்திருக்கிறார்.

    முதன்முதலாக எந்திரன் 2 படத்தைப் பற்றி ஷங்கர் செய்த இந்த ட்வீட்டிற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    மேலும் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், ராதிகா சரத்குமார் மற்றும் சீனு ராமசாமி போன்ற நட்சத்திரங்கள் ஷங்கருக்கும், எந்திரன் 2 படக் குழுவினருக்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து இருக்கின்றனர்.

    English summary
    Rajini's Endhiran 2 Shooting Starts From Today. Director Shankar Wrote on Twitter "2.0 shoot starts from tomorrow.. Excited!!!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X