எனிமி படத்தோட சூட்டிங் முடிந்தது... விரைவில் டீசர்.... விஷால் மகிழ்ச்சி

சென்னை : நடிகர் விஷால், ஆர்யா உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் எனிமி.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாகியுள்ளார் நடிகர் ஆர்யா.

இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளதாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஆனந்த் ஷங்கர் இயக்கம்

ஆனந்த் ஷங்கர் இயக்கம்

நடிகர் விஷால், ஆர்யா, மிருணாளினி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்டவர்களின் நடிப்பில் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள படம் எனிமி. தமன் இசையில் ஆர்டி ராஜசேகர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார்.

புகைப்படங்கள் பகிர்வு

புகைப்படங்கள் பகிர்வு

இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் ஆனந்த் ஷங்கர் மற்றும் நாயகன் விஷால் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர். இதில் அனைவரும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

துரித நடவடிக்கை

துரித நடவடிக்கை

இதையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டிற்குள் படத்தை ரிலீஸ் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Nivedha Pethuraj Race Car பக்கம் திரும்பியுள்ளார் | Lady Thala Ajith, Car Racing
விஷால் அப்டேட்

விஷால் அப்டேட்

இதனிடையே சூட்டிங் நிறைவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள படத்தின் நாயகன் விஷால், விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என்றும் அப்டேட் தெரிவித்துள்ளார். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துள்ள விஷால், ஆர்யாவுடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியளித்ததாகவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X