துபாயில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து திரும்பிய எனிமி படக்குழு

சென்னை : சக்ரா படத்திற்கு பிறகு விஷால் நடித்து வரும் படம் எனிமி. ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் தான் இந்த படத்தை இயக்குகிறார்.

கடந்த மாதம் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் கடந்த மாதம் துபாயில் படமாக்கப்பட்டது. துபாயில் படப்பிடிப்பை முடித்து படக்குழு திரும்பி இருப்பதாக தயாரிப்பாளர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.

Enemy movie teams Dubai schedule getting wrapped up

படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும், சென்னையில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் மட்டும் மீதம் இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. துபாயில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது.

எனிமி படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். விஷாலும், ஆர்யாவும் இதற்கு முன் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இரும்புத்திரை படத்திலும் இவர்கள் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போனது.

சமீபத்தில் வெளியான ஆர்யா நடித்த டெடி படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இந்த படமும் அவரை மாறுபட்ட கோணத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்க உதவும் என படக்குழு கருதுகிறது.

எனிமி படத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த மிருனாளினி ரவி ஹீரோயினாக நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் படமாக இப்படம் தயாராகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X