விஷால் -ஆர்யா மிரட்டும் எனிமி படத்தின் டீசர்... 20ம் தேதி வெளியீடு

சென்னை : நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா இருவரின் கூட்டணியில் உருவாகி வருகிறது எனிமி திரைப்படம்.

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் படம் உருவாகி வருகிறது.

தற்போது படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விஷால் -ஆர்யா நடிப்பு

விஷால் -ஆர்யா நடிப்பு

அரிமா நம்பி, இருமுகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வருகிறது எனிமி படம். படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்து வருகின்றனர். படத்தின் சூட்டிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் ஒரேநேரத்தில் துரிதமாக நடைபெற்று வந்தது.

20ம் தேதி ரிலீஸ்

20ம் தேதி ரிலீஸ்

இந்நிலையில் லாக்டவுன் காரணமாக படத்தின் சூட்டிங் தள்ளிப் போயுள்ளது. ஆயினும் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எனிமி திரைப்படத்தின் டீசர் வரும் 20ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

தமன் இசையமைப்பு

தமன் இசையமைப்பு

படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். வினோத்குமார் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தில் விஷாலிற்கு ஜோடியாகியுள்ளார் மிருணாளினி. மேலும் பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

படத்தில் எதிரிகள்?

படத்தில் எதிரிகள்?

நிஜத்தில் நண்பர்களாக உள்ள விஷால் மற்றும் ஆர்யா, எனிமி படத்தில் சேர்ந்து நடித்து வருவது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. எனிமி என்ற தலைப்பு பல்வேறு யூகங்களை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இருவரும் எதிரிகளாக வருவார்களா, என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே உள்ளது. இந்த சந்தேகங்களை படத்தின் டீசர் ஓரளவுக்கு பூர்த்தி செய்யும் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X