விஷால் & ஆர்யா நடிக்கும் எனிமி.. இறுதிக்கட்ட பணிகளை முடிக்க படக்குழு மும்முரம்

சென்னை: விஷால் நடிப்பில் இந்த ஆண்டு சக்ரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில் விஷாலின் அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது விஷாலின் எனிமி படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் "எனிமி" படத்தில் நடித்துள்ளனர். கதாநாயகியாக மிருனாளினி நடிக்கிறார். இந்த படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அந்த பணிகள் கிடப்பில் உள்ளது.

பிஸியாக விஷால்

பிஸியாக விஷால்

இதையடுத்து புதுமுக இயக்குனர் இயக்கும் #விஷால்31,

அடங்கமறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் #விஷால்32, விஷாலே இயக்கி நடிக்கும் துப்பறிவாளன் 2ம் பாகம் என விஷாலுக்கு அடுத்தடுத்த படங்கள் உள்ள நிலையில் மிகவும் பிஸியாக உள்ளார் விஷால்.

படப்பிடிப்பில் விஷால்

படப்பிடிப்பில் விஷால்

கொரோனா இரண்டாம் அலை காரணமாக நின்று போன படப்பிடிப்பு பணிகள் தற்போது மெல்ல மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளன. நிலைமையை கருதி படக்குழுக்கள் படங்களை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளது. விஷாலும் அவரின் 31வது படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

ஜூலை 9 தொடக்கம்

ஜூலை 9 தொடக்கம்

இந்நிலையில் கிடப்பில் போடப்பட்டு இருந்த எனிமி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ஜூலை 9 ம் தேதி தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 8 நாட்கள் ஹைதராபாத்தில் நடக்கவுள்ள இந்த படப்பிடிப்பில் பாடல் காட்சிகள் உட்பட இதர காட்சிகள் படமாகப்படவுள்ளன என பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X