ஆர்யா,விஷாலின் ‘எனிமி’… டீசர் எப்போ வெளியாகுது தெரியுமா?
சென்னை : எனிமி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இப்படத்தில் விஷால்,ஆர்யா, மம்தா மோகன்தாஸ், மிருணாளினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார், ஆர்.டிராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

ஆனந்த் ஷங்கர்
இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் எனிமி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா , மோகன்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்

ஆர்யா வில்லன்
இந்த திரைப்படத்தின் பல காட்சிகள் சென்னையில் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டன. இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் பாலாவின் இயக்கத்தில் உருவான அவன் இவன் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இதையடுத்து நீண்ட நாட்களுக்குப்பிறகு இருவரும் எனிமி படத்தில் இணைந்துள்ளனர்.

நாளை மாலை 6மணிக்கு
இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்த நிலையில் படத்திற்கான போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் , இப்படத்தில் டீசர் ரிலீஸ் தேதியை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நாளை மாலை 6 மணிக்கு எனிமி படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான சர்பட்டா பரம்பரை இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆர்யாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதனால், ஆர்யாவின் ரசிகர்கள் இப்படத்தை வரவேற்க பெரிதும் ஆர்வமாக இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











