சுறுசுறுப்படையும் விஷாலின் எனிமி…. டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
சென்னை : எனிமி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தில் விஷால்,ஆர்யா, மம்தா மோகன்தாஸ், மிருணாளினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார், ஆர்.டிராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் ஜூன் 20ந் தேதி டீசர் வெளியாக உள்ளதாக தகவல் பரவி வருகின்றன.

ஆனந்த் ஷங்கர்
இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் எனிமி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா , மோகன்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்

ஆர்யா வில்லன்
இந்த திரைப்படத்தின் பல காட்சிகள் சென்னையில் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டன. இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் பாலாவின் இயக்கத்தில் உருவான அவன் இவன் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இதையடுத்து நீண்ட நாட்களுக்குப்பிறகு இருவரும் எனிமி படத்தில் இணைந்துள்ளனர்.

டீசர் ரிலீஸ் தேதி
இந்நிலையில், இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் , இப்படத்தில் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வரும் ஜூன்20ந் தேதி டீசர் வெளியாகும் என்று இணையத்தில் தகவல் வேகமா பரவி வருகிறது.

படப்பிடிப்பு தொடக்கம்
தற்போது விஷால் 31 திரைப்படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் விஷால் தொடங்கி உள்ளார். இப்படத்தை து.பா சரவணன் இயக்கி வருகிறர். முதற்கட்டமாக சண்டை காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. ஜூலைக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு படக்குழு முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











