சாந்தனு கீர்த்தி இணைந்து நடிக்கும்…"எங்க போற டி" ஆல்பம் சாங்.. பிரபல நடன இயக்குனர் இயக்குகிறார்!

சென்னை : நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது மனைவி கீர்த்தி உடன் இணைந்து ரொமான்டிக் ஆல்பத்தில் நடிக்கிறார்.

சாந்தனு பாக்யராஜ் ஏற்கனவே முருங்கைக்காய் சிப்ஸ் என்ற கலக்கலான காமெடி கலந்த காதல் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அதில் இவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா நடிக்கிறார்.

திருமணமானது முதல் சாந்தனு இதுவரைக்கும் கீர்த்தி உடன் இணைந்து நடித்திராத நிலையில் இப்பொழுது முதல் முறையாக இந்த ரியல் கப்புள் ரீல் கப்புளாக களமிறங்க உள்ள நிலையில் இந்த ரொமான்டிக் மியூசிக்கல் ஆல்பத்தை பிரபல நடன இயக்குனர் இயக்குகிறார்.

அனைத்திலும் கை தேர்ந்தவர்

அனைத்திலும் கை தேர்ந்தவர்

இப்போது உள்ள இளம் நடிகர்களில் மிகவும் திறமை வாய்ந்த நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பு, நடனம், ஃபிட்டான உடல் என அனைத்திலும் கை தேர்ந்தவராக உள்ளார்.

முக்கியமான கதாபாத்திரம்

முக்கியமான கதாபாத்திரம்

இதற்கு முன் இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் சரிவர கைகொடுக்காத நிலையில் இப்பொழுது விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் இந்த திரைப்படம் கண்டிப்பாக இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையுமென நம்பப்படுகிறது.

அதுல்யா உடன் ஜோடி

அதுல்யா உடன் ஜோடி

இதற்கிடையில் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற காமெடி கலந்த ரொமான்டிக் திரைப்படத்தில் நடிகை அதுல்யா உடன் ஜோடி சேர்ந்திருக்கும் சாந்தனு இந்த திரைப்படம் மிகச்சிறப்பாக உருவாகி வருகிறது எனக்கூறி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளார்.

முதல் முறையாக

முதல் முறையாக

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி கீர்த்தி என்கிற கிகி-யை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட சாந்தனு, இவர்கள் இருவரும் எந்த ஒரு திரைப்படங்களிலும் இணைந்து நடித்த நிலையில் இப்போது முதல் முறையாக மியூசிக்கல் ஆல்பம் ஒன்றில் நடிக்கின்றனர்.

பிருந்தா மாஸ்டர்

பிருந்தா மாஸ்டர்

நட்சத்திர ரியல் கப்புளாக கலக்கி வந்த சாந்தனு மற்றும் கீர்த்தி இப்பொழுது முதன்முறையாக இணைய உள்ள ரொமான்டிக் ஆல்பத்திற்கு "எங்க போற டி" என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இதற்கு பிரபல நடன இயக்குனரான பிருந்தா மாஸ்டர் கோரியோகிராபி செய்வதோடு இயக்கியும் உள்ளார். பிரபல ஆர் ஜே விஜய் இதற்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார். மேலும் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் தரண் குமார் இதற்கு இசையமைத்துள்ளார். பிருந்தா மாஸ்டர் ஏற்கனவே ஹே சனாமிகா என்ற திரைப்படத்தை இயக்குகிறார் அதில் துல்கர் சல்மான் மற்றும் அதிதி ராவ் லீட் ரோலில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X