Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எங்கேயும் எப்போதும் சர்வானந்துக்கு Engagement ஆகிடுச்சு.. அரசியல் குடும்பத்து பெண் தான் மணமகளாம்!
ஹைதராபாத்: எங்கேயும் எப்போதும், கணம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் சர்வானந்த் அரசியல் குடும்பத்தை சேர்ந்த ரக்ஷிதா ரெட்டி உடன் இன்று நிச்சயம் செய்து கொண்டார்.
கடந்த 2004ல் தெலுங்கில் வெளியான அய்தோ தாரிகு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சர்வானந்த். அதே ஆண்டு கெளரி, சங்கர் தாதா எம்பிபிஎஸ், யுவசேனா என 4 படங்களில் அடுத்தடுத்து நடித்து அசத்தினார்.
காதல்னா சும்மா இல்லை படம் மூலம் தமிழில் அறிமுகமானாலும் எங்கேயும் எப்போதும் படம் அவருக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியைத் தேடி தந்தது.
கடவுள் தான் காப்பாத்தணும்.. ஆன்மிக பாதையில் சமந்தா.. கையில் எப்போதும் ஜெபமாலை.. என்ன விஷயம்?
எங்கேயும் எப்போதும் சர்வானந்த்
தெலுங்கு நடிகரான சர்வானந்த் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 2011ம் ஆண்டு இயக்குநர் சரவணன் இயக்கத்தில் வெளியான எங்கேயும் எப்போதும் படத்தில் செகண்ட் ஹீரோவாக சர்வானந்த் நடித்து இருந்தார். ஜெய், அஞ்சலி, அனன்யா உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்து இருந்தனர். நாளை நமதே, கணம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சர்வானந்த் நடித்துள்ளார்.
கணம்
இயக்குநர் சேரன் உடன் இணைந்து ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்த சர்வானந்த் அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு கணம் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். அமலா அக்கினேனி அம்மாவாக நடிக்க பாசம் கலந்த டைம் மெஷின் படமாக உருவாகி இருந்த கணம் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
என்கேஜ்மென்ட் ஆகிடுச்சு
எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த சர்வானந்துக்கு இப்போ 38 வயதாகிறது. இந்நிலையில், அவருக்கு அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞரான ரக்ஷிதா ஷெட்டி என்பவருடன் இன்று கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.
அரசியல் குடும்பத்து பெண்
ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முக்கிய அரசியல்வாதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் ரக்ஷிதா ரெட்டி என தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் முக்கிய பிரபலங்களும், குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
மீட் மை ஸ்பெஷல் ஒன்
நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்ட நடிகர் சர்வானந்த் மீட் மை ஸ்பெஷல் ஒன் என வருங்கால மனைவி ரக்ஷிதா ரெட்டியை தனது ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அவங்களும் ஹீரோயின் போலத்தான் இருக்காங்க என்றும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வாழ்த்துக்கள் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
ராம்சரண் பங்கேற்பு
நடிகர் சர்வானந்தின் நிச்சயதார்த்த விழாவுக்கு தனது மனைவியுடன் வந்து கலந்து கொண்ட ராம்சரண் சர்வானந்த் உடன் நிகழ்ச்சி மேடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் டிரெண்டாகி வருகின்றன. தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்களும் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.