‘எங்கேயும் எப்போதும்' பட நடிகருக்கு விரைவில் திருமணம்..முன்னாள் அமைச்சரின் பேத்தியை மணக்கிறாரா?
சென்னை : எங்கேயும் எப்போதும் பட நடிகருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தெலுங்கு நடிகரான சர்வானந்த் 'ஐதோ தரீக்கு' என்ற படத்தின் மூலம் சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் கௌரி, சங்கர் தாரா எம்.பி.பி.எஸ் போன்ற படங்களில் நடித்தார்.
தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த சர்வானந்த், ரவி கிருஷ்ணாவுடன் இணைந்து காதல்னா சும்மா இல்லை படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கில் ஓரளவு ஓடியது ஆனால், தமிழில் எடுபடவில்லை.

நடிகர் சர்வானந்த்
தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமான படமே வரவேற்பை பெறாததால், மீண்டும் தெலுங்கு படங்களில் நடித்த நல்ல நடிகர் என பெயர் எடுத்தார். இதன் பின் நான்கு ஆண்டுகள் கழித்து எம் சரவணன் இயக்கத்தில் ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்த எங்கேயும் எப்போதும் படத்தில் கௌதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

எங்கேயும் எப்போதும்
ஜெய், அஞ்சலி, அனன்யா, சர்வானந்த் ஆகியோர் இணைந்து நடித்திருந்த இப்படத்தில் அனைத்துப்பாடல்களும் ஹிட்டடித்தது. குறிப்பாக 'கோவிந்தா கோவிந்தா சென்னையில புது பொண்ணு' பாடல் நடிகர் சர்வானந்திற்கு தமிழ் ரசிகைகளையும் பெற்றுத்தந்தது. இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இந்தப் படத்துக்கு பிறகு டோலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக கமிட்டானர் சர்வானந்த்.

விரைவில் திருமணம்
அண்மையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் வெளியான கணம் படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பினார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வரும் சர்வானந்திற்கு இந்த ஆண்டு திருமண யோகம் அடைந்துள்ளது. ஜனவரி 26ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் அமைச்சரின் பேத்தியை மணக்கிறார்
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளகஸ்தி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 5 முறை வெற்றி பெற்ற மறைந்த போஜல கோபால கிருஷ்ண ரெட்டியின் பேத்தியை தான் சர்வானந்த் திருமணம் செய்ய இருப்பதாகவும், மணமகள் பத்மா அமெரிக்காவில் இன்ஜினியர் படித்துள்ளார். இவர்களில் திருமண நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே அழைக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. சர்வானந்த் மற்றும் பத்மா திருமணம் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











