twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அட இவங்க எல்லாம் இன்ஜினியரிங் படிப்பு படிச்ச நடிகர்களா?

    |

    சென்னை: முன்பெல்லாம் நடிகர் நடிகையர்களிடம் பேட்டி எடுக்கும் போது நடிக்க வராவிட்டால் என்று கேட்டால் இன்ஜினியர், டாக்டர் ஆகியிருப்பேன் என்று சொல்வார்கள். இப்போதோ நிறைய நடிகர்கள் இன்ஜினியரிங் படித்துவிட்டு நடிக்க வருகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நாட்டின் பொக்கிஷமாக கருதப்படும் சர்.விசுவேசுவரய்யாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதியான நேற்று இந்தியா முழுவதும் பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. அதே வேளையில் தமிழ் திரையுலகில் வலம் வரும் பொறியாளர்களையும் நாம் நினைவு கூரத்தக்கது அவசியமாகும்.

    இந்தியாவின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை வகுத்து கொடுத்தவர், பல மிகப்பெரிய சாதனைகளை புரிந்தவர் சர்.விசுவேசுவரய்யா. அவருக்கு இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருதினை கடந்த 1955ஆம் ஆண்டில் வழங்கி கவுரவித்தனர். அந்த சாதனையாளரின் பிறந்த நாளே பொறியாளர் தினமாக இந்திய முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    Engineers Day Celebration in Tamil film Industry

    பொறியாளர்களின் அபாரமான சக்தி நமக்கு பல வழிகளில் உதவுகின்றன. அப்படி இருக்கையில் நமது தமிழ் சினிமாவில் பொறியாளர்கள் இல்லாமல் போய்விடுவார்களா என்ன.

    இன்றைக்கு நம் தமிழ் சினிமாவை கலக்கி வரும் சில நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பொறியாளர்களாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்கள் என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கும். ஆனால் நம்மில் பலருக்கு இந்த உண்மை தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் யார் என்று தெரிந்து கொண்டு அவர்களுக்கு நம்முடைய பொறியாளர் தின வாழ்த்தினை தெரிவிப்போம்.

    Engineers Day Celebration in Tamil film Industry

    தமிழ் சினிமாவில் நடிகர்களில் சிவகார்த்திகேயன், பிரசன்னா, ஆர்யா, கார்த்தி, கணேஷ் வெங்கட்ராமன், கார்த்திக்குமார், நடிகைகளில் டாப்ஸீ பன்னு, கனிகா, பாடகர்களில் ஷங்கர் மகாதேவன், இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி, அருண்ராஜா காமராஜ் போன்றவர்கள் பொறியாளர் படிப்பை முடித்து விட்டு, பின்னர் தங்கள் கனவான சினிமா துறையில் அடியெடுத்து வைத்துள்ளனர். அவர்களின் விடா முயற்சியும் திறமையும் தான் அவர்களை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.

    தமிழ் சினிமாவிற்கு இவர்களின் பங்களிப்பு மிகுதியானது. இவர்கள் திரைத்துறைக்கு வராமல் பொறியாளர்களாக சாதித்திருந்தால் நாம் எத்தனையோ திறமைசாலிகளை இழந்திருப்போம். பொறியியல் படித்த அனைத்து பொறியாளர்களுக்கு ஃபிலிமிபீட் சார்பாக மனம் கனிந்த பொறியாளர்தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிளோம்.

    English summary
    It is necessary to commemorate the Engineering Actors in the Tamil film industry as it was celebrated as Engineer's Day across India yesterday, the 15th of September, the birthday of Sir Visweswarayya, one of the country's treasured spirits.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X