What is valimai update : இங்கிலாந்து வீரர் மொயீன் அலியின் சுவாரசிய பதில் !
சென்னை : வலிமை திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், இங்கிலாந்து வீரர் மொயீன் அலி, சுவாரசியமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு, வலிமை திரைப்படம் குறித்த தகவல் வெளியானது. அஜித் வலிமை படத்தில் நடிக்கிறார் என்ற தகவலை தவிரவேறு எந்த தகவலும் வெளியாகததால் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வலிமை படம் அப்டேட் கேட்டு வந்தனர்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டிக்கு வந்த அஜித்தின் ரசிகர்கள், இங்கிலாந்து வீரர் மொயீன் அலி பீல்டிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அலி பாய் என்று அழைத்து, வலிமை அப்டேட் என்கிறார். அதை கேட்ட மொயீன் அலி, ஏதுமறியாத பிள்ளை போல சிரிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்நிலையில், வலிமை திரைப்படம் இன்று உலகம் ழுழுவதும் வெளியாகி உள்ள நிலையில், இங்கிலாந்து வீரர் மொயீன் அலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஆண்டு என்னிடம் மைதானத்தில் வலிமை அப்பேட் கேட்டார்கள். அப்போது, அது எனக்கு என்னவென்று புரியவில்லை. நான் தினேஷ் கார்த்திக்கிடம் வலிமை என்றால் என்ன என்று கேட்டேன் அது அஜித் நடிக்கும் படம் என்றார்.
அப்போது, நான் வலிமை பற்றி இணையத்தில் ஆராய்ச்சி செய்தேன். அது ஒரு திரைப்படம் என்பதை அறிந்தேன். நீண்ட காலமாக அந்த படம் வெளியே வர வேண்டும் என்று மக்கள் ஆர்வமாக இருப்பதை புரிந்து கொண்டேன். மேலும், வலிமை படம் குறித்த லிங்குகள், வீடியோக்களை மக்கள் எனக்கு அனுப்பினார்கள். அந்த படத்தை பார்க்க ஆர்வமுடன் இருப்பதாக கூறினார். அஜித்தின் ரசிகர்களால் மொயீன் அலி வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி உள்ள வலிமை திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை ரோகினி திரையரங்கில் ஹுமா குரோஷி, போனிகபூர், கார்த்திகேயன் ஆகியோர் ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.


Click it and Unblock the Notifications











