இங்கிலீஷ்காரனுக்கு வந்த சிக்கல்! சத்யராஜ், நமீதா, மதுமிதா ஆகியோர் நடித்து வெளியாகியுள்ள இங்கிலீஷ்காரன் படத்தில், இடம் பெற்ற கஜினி முகம்மதுபாடலின் இடையே வரும் இஸ்லாமிய இசை, மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக புகார் எழுந்ததால்,அந்த இசை நீக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியுள்ளார்.தற்போது கோலிவுட்டில் இளம் நாயகர்களுக்கு போட்டி போடும் விதத்தில் முன்னாள் இளைஞர் சத்யராஜின் படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவரது படங்கள் மினிமம் கேரண்டியாக இருப்பதால் சத்யராஜின் காட்டில் இப்போது அடைமழை.இவரது படங்களுக்கு லொள்ளு சமாச்சாரங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது. கூடவே பிரச்சினைகளுக்கும். சமீபத்தில் இவர்நடித்த தேவுடா என்ற படத்திற்கு இந்து முன்னணி அமைப்பிடமிருந்து கடும் மிரட்டல் வந்தது.இதற்குக் காரணம், அந்தப் படத்தில் அவர் போலி சாமியார் வேடத்தில் தோன்றியது தான். படத்தில் கதைப்படி சத்யராஜ் சாமியார்வேடமிட்டு பல தகிடுதத்த வேலைகளில் ஈடுபடுவார். இறுதியில் போலீஸார் அவரை கைது செய்வார்கள்.இந்தப் படத்தில் சாமியார் வேடத்தில் அவர் பண்ணிய சில லொள்ளுகள் இந்து அமைப்பினரை உசுப்பேற்றி விடவேதேவுடாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சமீபத்தில் வெளிவந்துள்ள இங்கிலீஷ்காரன் படத்திற்கும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஷக்திசிதம்பரம் இயக்கிய இந்தப் படத்தில் கஜினி முகம்மது, கஜினி முகம்மது என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடலின்இடை இடையே இஸ்லாமிய பாணி இசையும் வருகிறது. இது இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் இருப்பதாக கூறி தமிழ்நாடு இஸ்லாமிய மக்கள் இயக்கத்தலைவர் காயல் இளவரசு போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து குறிப்பிட்ட இசையை பாடல் காட்சியிலிருந்து நீக்கி விட்டதாக படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

By Staff

சத்யராஜ், நமீதா, மதுமிதா ஆகியோர் நடித்து வெளியாகியுள்ள இங்கிலீஷ்காரன் படத்தில், இடம் பெற்ற கஜினி முகம்மதுபாடலின் இடையே வரும் இஸ்லாமிய இசை, மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக புகார் எழுந்ததால்,அந்த இசை நீக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

தற்போது கோலிவுட்டில் இளம் நாயகர்களுக்கு போட்டி போடும் விதத்தில் முன்னாள் இளைஞர் சத்யராஜின் படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவரது படங்கள் மினிமம் கேரண்டியாக இருப்பதால் சத்யராஜின் காட்டில் இப்போது அடைமழை.

இவரது படங்களுக்கு லொள்ளு சமாச்சாரங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது. கூடவே பிரச்சினைகளுக்கும். சமீபத்தில் இவர்நடித்த தேவுடா என்ற படத்திற்கு இந்து முன்னணி அமைப்பிடமிருந்து கடும் மிரட்டல் வந்தது.


இதற்குக் காரணம், அந்தப் படத்தில் அவர் போலி சாமியார் வேடத்தில் தோன்றியது தான். படத்தில் கதைப்படி சத்யராஜ் சாமியார்வேடமிட்டு பல தகிடுதத்த வேலைகளில் ஈடுபடுவார். இறுதியில் போலீஸார் அவரை கைது செய்வார்கள்.

இந்தப் படத்தில் சாமியார் வேடத்தில் அவர் பண்ணிய சில லொள்ளுகள் இந்து அமைப்பினரை உசுப்பேற்றி விடவேதேவுடாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சமீபத்தில் வெளிவந்துள்ள இங்கிலீஷ்காரன் படத்திற்கும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஷக்திசிதம்பரம் இயக்கிய இந்தப் படத்தில் கஜினி முகம்மது, கஜினி முகம்மது என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடலின்இடை இடையே இஸ்லாமிய பாணி இசையும் வருகிறது.


இது இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் இருப்பதாக கூறி தமிழ்நாடு இஸ்லாமிய மக்கள் இயக்கத்தலைவர் காயல் இளவரசு போலீஸில் புகார் செய்தார்.

இதையடுத்து குறிப்பிட்ட இசையை பாடல் காட்சியிலிருந்து நீக்கி விட்டதாக படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X