Don't Miss!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒரு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள 100 மில்லியன் வியூஸ்.. பட்டித் தொட்டி எங்கும் என்ஜாய் எஞ்சாமி தான்!
சென்னை: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தீ மற்றும் அறிவு பாடி ஆடியுள்ள என்ஜாய் எஞ்சாமி பாடல் தான் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.
Recommended Video
கடந்த மார்ச் 7ம் தேதி யூடியூப் தளத்தில் வெளியான இந்த பாடல் வெறும் 28 நாட்களிலேயே 100 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
நடிகை நிவேதா தாமஸிற்கு உருமாறிய கொரோனா தொற்று
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மயக்கும் விதமாகவும், ஆழமான கருத்துக்களையும் உள்ளடக்கி உருவாகி இருக்கிறது இந்த பாடல்.
மேற்கத்திய ஸ்டைலில்
வெளிநாட்டு ஆல்பம் பாடல்களை போல அருமையான மேக்கிங்கில் நம்ம ஊரு கிராமத்தையும் மண் மனத்தையும் சேர்த்து தெருக்குரல் அறிவு மற்றும் தீ இணைந்து ஆடி பாடி உள்ள இந்த என்ஜாய் எஞ்சாமி கேட்பவர்களை அடுத்த நொடியே ஈர்ப்பது போல அமைந்துள்ளது. இயக்குநர் அமித் கிருஷ்ணா இயக்கத்தில் ஆல்பம் பாடல் மிகவும் அற்புதமாக உருவாகி உள்ளது.
பறை இசை
தமிழ்நாட்டின் பாரம்பரியமான பறை இசையை அடிநாதமாக கொண்டு இந்த பாடலை உருவாக்கி உள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கனெக்ட் செய்யும் விதமாக அழகான மற்றும் ஆழமான பாடல் வரிகளை அறிவு எழுதி தீ உடன் இணைந்து பாடியுள்ளார். ஆரம்பத்தில் காட்டும் மண் அதிரும் காட்சிகளும் பாடலின் வெற்றியை உறுதி செய்துள்ளது.
100 மில்லியன் பார்வைகள்
பாடகி தீ பாடும் பாடல்கள் எல்லாமே சர்வ சாதாரணமாக 100 மில்லியன் பார்வைகளை கடந்து படு வைரலாகி வருகின்றன. தனுஷ் உடன் இணைந்து இவர் பாடிய ரவுடி பேபி பாடல் 1000 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலானது குறிப்பிடத்தக்கது. சூரரைப் போற்று படத்திற்காக இவர் பாடிய காட்டுப் பயலே பாட்டும் வேற லெவல் ஹிட் அடித்தது. இந்நிலையில், என்ஜாய் எஞ்சாமி பாடல் 28 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சக்கைப் போடு போட்டு வருகிறது.
இமாலய சாதனை
இந்த பாடலை வெறும் ஒரு மாதத்திற்குள் 10 கோடி பேர் பார்த்துள்ள நிலையில், இன்னமும் மிகப்பெரிய இமாலய சாதனையை இந்த பாடல் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவில் இடம்பெறும் சூப்பர் ஹிட் பாடல்கள் 100 மில்லியன் வியூஸ் பெற கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் ஆகும் நிலையில், 28 நாட்களில் இப்படியொரு வெறித்தன ஹிட்டை இந்த பாடல் அடைந்துள்ளது.
|
பிரபலங்களின் ஃபேவரைட்
நடிகர் சூர்யா முதல் ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த மனதை மயக்கும் பாடலுக்கு அடிக்ட் ஆகி உள்ளனர். ராஷி கன்னா, ஷாலு ஷம்மு உள்ளிட்ட நடிகைகளும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். ஏகப்பட்ட குழந்தைகளும் இந்த பாடலை பாடியும் ஆடியும் வருகின்றன.