என்ன சொல்றீங்க.. என்ஜாய் எஞ்சாமி பிரபலம்.. பிக் பாஸ் 5க்கு வராரா? வேற லெவல் தான் போங்க!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 பற்றிய பரபரப்பான பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
பிக் பாஸ் சீசன் 5ஐ உலகநாயகன் கமலுக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்கப் போகிறார் என்றும், சில சினிமா நடிகர்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகின்றனர் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இந்நிலையில், அடுத்ததாக தற்போது வைரலாகி வரும் ஹாட் டாக் என்னவென்றால், என்ஜாய் எஞ்சாமி பாடல் பிரபலத்தை பிக் பாஸ் சீசன் 5க்கு போட்டியாளராக கொண்டு வர தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.

சென்சேஷனல் நிகழ்ச்சி
உலகளவில் கலக்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியாவிலும் பல ஆண்டுகளாக ரசிகர்களின் ஹாட் ஃபேவரைட் ஷோவாக மாறியுள்ளது. தமிழில் கடந்த 4 சீசன்களுக்கும் மக்கள் அமோக வரவேற்பு கொடுத்த நிலையில், தற்போது 5வது சீசனை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

பெயர் கெட்டுப் போய்விடும்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் அளவுக்கு பல பிரபலங்களிடம் வரவேற்பு இருப்பது இல்லை என்பதும் நிதர்சனமாகவே உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், தங்கள் பெயர் கெட்டுப் போய்விடும் என்றும், அது ரியல் கிடையாது என்றும் ஏகப்பட்ட சர்ச்சையான கருத்துக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியை சுற்றி வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

இறங்கி வேலை செய்யும் விஜய் டிவி
பிக் பாஸ் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து பரவலாக சர்ச்சைகள், வைரல் வீடியோக்கள், சண்டைகள், பாராட்டுக்கள் என ஏகப்பட்ட விஷயங்கள் பரவும் அளவுக்கு விஜய் டிவியே இறங்கி வேலை செய்யும் என்றும் கூறப்படுகிறது.

சிம்பு கன்ஃபார்மா
அரசியல் களத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வரும் கமல்ஹாசன் அடுத்த சீசனில் கலந்து கொள்வது மிகவும் சிக்கலான விஷயம் என்பதால், புதிய தொகுப்பாளரை தேடும் பணியில் விஜய் டிவி களமிறங்கி உள்ளது. நடிகர் சிம்புவிடம் பிக் பாஸ் சீசன் 5ஐ தொகுத்து வழங்கும் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போட்டியாளர்கள் லிஸ்ட்
பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்கள் இவர்கள் தான் என வழக்கம் போல கெஸ்ஸிங் லிஸ்ட் ஒன்றும் வைரலாகி வருகிறது. விஜய் டிவி பிரபலங்கள், குக் வித் கோமாளி பிரபலங்களை தாண்டி இந்த முறை யூடியூப் சென்சேஷன் ஆட்களையும் களமிறக்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்ஜாய் எஞ்சாமி
நடிகர் நகுல், ஆனந்த்ராஜ், கனி உள்ளிட்ட பிரபலங்கள் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அடுத்ததாக யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வரும் என்ஜாய் எஞ்சாமி பாடல் பிரபலம் கலந்து கொள்ளப் போவதாகவும் அதிரடி அப்டேட் ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.

யார் அந்த பிரபலம்
பாடகி தீ உடன் இணைந்து என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய ராப் பாடகர் தெருக்குரல் அறிவு தான் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார் என சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இன்னும் எத்தனை பெரிய தலைகளின் பெயர்கள் எல்லாம் அடிபடுகின்றது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

போன சீசனில்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4லும் வேல்முருகன், சுசித்ரா, ஆஜீத் என ஏகப்பட்ட பாடகர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில், இந்த சீசனிலும் சில பாடகர்கள் இடம்பெறுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் தற்போது என்ஜாய் எஞ்சாமி பாடல் மூலம் கலக்கி வரும் தெருக்குரல் அறிவு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிச்சயம் டிஆர்பி ரேட்டிங் ஏகத்துக்கும் எகிறும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications











