கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க தம்பி.. அறிவுக்கு ஆதரவாக வந்த நெட்டிசனை விளாசி விட்ட சந்தோஷ் நாராயணன்!

சென்னை: சந்தோஷ் நாராயணன் மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோருக்கு இடையிலான என்ஜாயி பாடல் தொடர்பான காப்புரிமை பிரச்னை இன்னும் முடியவில்லை. பாடல் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகிய நிலையிலும் இந்த பிரச்னைக்கு இன்னும் தீர்வு வரவில்லை என்றுதான் கூறவேண்டும் போல. பாடல் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த தெருக்குரல் அறிவு, தனக்கான அங்கீகாரம் அந்த பாடலில் கிடைக்கவில்லை என்றும், சந்தோஷ் நாராயணனை காட்டமாக விமர்சித்தார்.

இதற்கு சந்தோஷ் நாராயணனும் பதில் அளிக்க, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்கு வாதத்தில் நாங்களும் கலந்து கொள்கிறோம் என்று அட்டனன்ஸ் போட்ட இணையவாசிகளுக்கு சந்தோஷ் நாராயணன் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.

Enjoy Enjaami Row Santhosh Narayanan Explains Song s Origin Responds to Arivu

அதாவது இணையவாசி ஒருவர், சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மகள் தீ இணைந்து தெருக்குரல் அறிவை ஏமாற்றிவிட்டார்கள், அவரது பாடலை இவர்கள் இருவரும் இணைந்து திருடிவிட்டார்கள் என்றும் பதிவிட்டிருந்தார்.

சந்தோஷ் நாராயண பதிலடி: அவரது இந்த போஸ்ட்டுக்கு சந்தோஷ் நாராயணன் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது அவரது எக்ஸ் பக்கத்தில், " கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க தம்பி. தேடிப் பார்த்தால் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கான தெளிவான பதில்கள் பல இடங்களில் இருக்கு. இந்தப் பாடல் உருவாவதற்கான அடிப்படை யோசனை தீ (Dhee) சொன்னதுதான், பாடலின் சில மெட்டுகளும் தீ சொன்னதுதான். பாடலின் மையக்கரு மற்றும் கதைக்களம் இயக்குநர் மணிகண்டனால் உருவாக்கப்பட்டது. அப்போது நானும் அவரும் கடைசி விவசாயி படத்திற்காக பணியாற்றிக் கொண்டு இருந்தோம்.

அறிவின் பங்கு என்ன?: பாடலை இசையமைத்து, தயாரித்து, அதன் அனைத்து மெலடிகளையும் உருவாக்கியது நான். அறிவு (Arivu) தான் பாடலின் பெரும்பாலான வரிகளை எழுதி, பாடவும் செய்தார். மேலும் சில பாரம்பரிய ஒப்பாரி வரிகளை பாடலுக்கு ஏற்ப மாற்றி அமைத்ததும் அறிவுதான். எனது இசையில் உருவான பாடல்களான 'ரகிடா', 'கனிமா' போன்ற பாடல்களில் நான் தான் முதல் வார்த்தையைப் பரிந்துரைத்தேன். அதேபோலத்தான் இந்த பாடலிலும் 'எஞ்சாமி' என்ற வார்த்தையை நான் பரிந்துரைத்தேன். நல்லவேளை நாம் டிஜிட்டல் உலகில் வாழ்கிறோம்; எனவே, பலரது கேள்விகளுக்கு ஆதாரத்துடன் நிரூபிக்க முடிகிறது" என்று பதில் அளித்துள்ளார். இவரது இந்த பதில் ரசிகர்கள் தொடங்கி நெட்டிசன்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X