கபாலி காய்ச்சல் தீரட்டும்... காத்திருக்கும் ‘எங்கிட்ட மோதாதே’!

சென்னை: நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள எங்கிட்ட மோதாதே படம், ரிலீசுக்கு தயாராக உள்ளபோதும், கபாலி ரிலீஸுக்கு பின்னரே அதனை ரிலீஸ் செய்ய வேண்டும் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம்.

விஜய் படம் உட்பட பாலிவுட்டிலும் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி என்கிற நடராஜ், நடிகராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். மிளகா, முத்துக்கு முத்தாக, சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

Enkitta mothathea team waits for Kabali fever to settle down

இந்நிலையில், தற்போது அவர் எங்கிட்ட மோதாதே என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

பார்வதி நாயர்...

ஈராஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்துள்ள இப்படத்தில் நாயகியாக பார்வதி நாயர் நடித்துள்ளார். அஜித்தின் என்னை அறிந்தால், கமலின் உத்தம வில்லன் ஆகிய படங்களுக்கு பிறகு பார்வதி நடித்துள்ள படம் இது.

சஞ்சிதா ஷெட்டி...

இவர்களுடன் சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி உள்ளிட்டோர் நடிக்க, ராமு செல்லப்பா இப்படத்தை இயக்கியுள்ளார். நட்ராஜன் சங்கரன் இசையமைக்க, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பர்ஸ்ட் லுக்...

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. தற்போது படவேலைகள் அனைத்தும் முடிந்து படம் ரிலீசுக்குத் தயாராக உள்ளது.

கபாலி ரிலீஸ்...

ஆனால், அடுத்த மாதம் ரஜினியின் கபாலி படம் ரிலீசாக உள்ளது. எனவே, இப்போது தங்களது படத்தை வெளியிட்டால், கபாலி காய்ச்சலில் தங்களது படம் எடுபடாமல் போய் விடும் என்பது படக்குழுவின் கவலை.

ஆகஸ்ட் மாதம்...

இதனால் கபாலி ரிலீசுக்குப் பின்னர் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி அல்லது 19ம் தேதி எங்கிட்ட மோதாதே படத்தை வெளியிடலாம் என தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனராம். விரைவில் இப்பட ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிவின்பாலி படம்...

இதற்கிடையே பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி தமிழில் நேரடியாக நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நட்டி. இப்படத்தின் படப்பிடிப்புகள் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

மீண்டும் படப்பிடிப்பு...

இப்படத்தில் தனது 60 சதவீத காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்ட நட்டி, அடுத்த மாதம் 15ம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X