”என்ன தலைவரே திரும்பவும் லூப்பா?”: எஸ்.ஜே.சூர்யாவின் ட்விட்டும் கவனம் ஈர்க்கும் ‘ஜீவி 2’ ட்ரெய்லரும்
சென்னை: வெற்றி நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான 'ஜீவி' திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது.
தொடர்பியல், முக்கோண விதி என புதுமையான கதைக்களத்தில் சயின்ஸ் திரில்லராக இந்தப் படம் உருவாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது உருவாகியுள்ள 'ஜீவி2' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

திரைக்கதையில் பிரமிக்க வைத்த ஜீவி
வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் கடந்த 2019ல் வெளியான ‘ஜிவி' படத்தில் வெற்றி, கருணாகரன், ரோகிணி, மைம் கோபி என பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் திரைக்கதையும், மேக்கிங்கும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் விமர்சகர்களும் ‘ஜீவி' படத்தைக் கொண்டாடித் தீர்த்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது அதேக் கூட்டணியில் ஜீவி படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகியுள்ளது.

சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் ஜீவி 2
சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, வெங்கட் பிரபு கூட்டணியில் 'மாநாடு' திரைப்படத்தை தயாரித்து, அதை மிகப் பெரிய வெற்றியாக்கினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அவரே ‘ஜீவி 2' படத்தையும் தயாரித்துள்ளார். அதனால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. சூட்டிங்கை வேகமாக முடித்துவிட்ட படக்குழு, படத்தின் ரிலீஸில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஆஹா ஓடிடியில் ரிலீஸ்
'ஜீவி' படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதால், அதன் 2ம் பாகமும் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘ஜீவி 2' நேரடியாக ஆஹா ஓடிடியில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனாலும், படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ட்ரெய்லரை வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா
இந்நிலையில், ஜீவி 2 படத்தின் ட்ரெய்லரை, இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டுள்ளார். "என்ன தலைவரே? திரும்பவும் லூப்பா... ஆனா இது வேற மாதிரி இருக்கே!" என்ற கேப்ஷனுடன் எஸ்.ஜே. சூர்யா ட்ரெய்லரை வெளியிட்டது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எஸ்.ஜே. சூர்யா குறிப்பிட்ட மாதிரியே, ட்ரெய்லரில் செம்ம சர்ப்ரைஸ்கள் உள்ளன.
Recommended Video

எல்லாத்துக்கும் விடை தெரியுமா?
"தொடர்பியல், முக்கோண விதி, மையப் புள்ளி" என ஆரம்பமே அதகளமாக இருக்கும் இந்த ட்ரெய்லர், அடுத்தடுத்து பல புதிர்களைப் போட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் தொடர்பியல், முக்கோண விதியை பின்னணியாக வைத்து ‘ஜீவி 2' படத்தை இயக்கியுள்ளார் வி.ஜே. கோபிநாத். இந்த பாகத்தில் எல்லா புதிர்களுக்கும் விடை தெரியுமா? என காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











