என்னை அறிந்தால் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் பிரபல முன்னணி ஹீரோ!

சென்னை : அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார்.

திரிஷா, அனுஷ்கா, அணிகா, அருண் விஜய் உள்ளிட்டோர் பலர் இதில் நடித்திருந்தனர்.

தமிழில் ஹிட் அடித்த இந்த திரைப்படம் இப்பொழுது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இதில் தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீபகாலமாக தமிழில் திரைப்படங்கள் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட் அடித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது.

அஜித்துக்கு வில்லனாக

அஜித்துக்கு வில்லனாக

இதில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த இவருக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. என்னை அறிந்தாலுக்கு பிறகு அருண் விஜய் தொடர்ந்து ஹீரோ கதைகளில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. திரிஷா, அனுஷ்கா, அணிகா, அருண் விஜய் உள்ளிட்டோர் பலர் இதில் நடித்திருந்தனர்.

நொடிக்கு நொடி பரபரக்க

நொடிக்கு நொடி பரபரக்க

போலீஸ் வேடத்திலும் ரவுடி கும்பலுடன் இணையும் வேடம் என இரு இடங்களுக்கும் துளிகூட சம்பந்தமே இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பாக உடல் மொழியை மாற்றி அட்டகாச படுத்திருந்த அஜித்தும் அருண் விஜய்யும் மோதும் காட்சிகள் நொடிக்கு நொடி பரபரக்க செய்யும்.

தெலுங்கில் ரீமேக்

தெலுங்கில் ரீமேக்

இவ்வாறு ஆக்சன் ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் மகள் சென்டிமென்ட் என படம் முழுவதும் கௌதம் மேனன் பிரமாதப் படுத்தியிருப்பார். இவ்வாறு தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற என்னை அறிந்தால் இப்பொழுது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இதில் பிரபல முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாஹோ சுஜீத்

சாஹோ சுஜீத்

பிரபாஸின் சாஹோ படத்தை இயக்கிய சுஜீத் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிரஞ்சீவி இப்பொழுது லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு சுஜீத் இயக்கத்தில் என்னை அறிந்தால் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு ரசிகர்களுக்காக ஒரு சில மாற்றங்களும் கதையில் செய்யப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X