அண்ணாத்த படத்தில் "என்னுயிரே" வீடியோ பாடல் வெளியானது!
சென்னை : அண்ணாத்த திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, யோகிபாபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருந்தனர்.
குடும்பங்கள் கொண்டாடும் மிகச் சிறந்த கமர்சியல் திரைப்படமாக வெளியான அண்ணாத்த படத்தில் அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் "என்னுயிரே" வீடியோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பில்
நடிகர் அஜித்துடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வந்த சிறுத்தை சிவா முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கூட்டணி அமைத்த திரைப்படம் அண்ணாத்த. ஹைதராபாத்தில் பெரும்பான்மையான காட்சிகள் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கொரோனா சூழல் காரணமாக தடைப்பட்டது. பின் இதர காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது. ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பில் உருவான திரைப்படம் கடந்த தீபாவளிக்கு திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியானது.

பண்டிகை தினத்தில் வெளியானது
இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். சந்திரமுகி, தர்பார் ஆகிய படங்களை தொடர்ந்து நயன்தாரா ரஜினிகாந்துக்கு ஜோடியாக மூன்றாவது முறையாக இந்த படத்தில் நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்துக்கு தங்கையாக இந்த படத்தில் நடித்து இருப்பார். மேலும் குஷ்பூ,மீனா, யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து இருக்க பண்டிகை தினத்தில் வெளியான இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

அண்ணன் தங்கை பாசம் போராட்டம்
அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடை போட்டு அண்ணாத்த 250 கோடியைத் தாண்டி தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பு அண்ணன் தங்கை பாசம் போராட்டம், தெறிக்கவிடும் சண்டைக்காட்சிகள் என பக்கா மாஸாக வெளியான அண்ணாத்த படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்திருந்தார். டி இமான் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் வெற்றி பெற்றது

"என்னுயிரே" வீடியோ பாடல் வெளியானது
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் கிராமத்து கதை களத்தில் நடிப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு ரகத்தில் அமைய இதில் "என்னுயிரே" பாடல் பார்க்கும் அனைவரின் மனதையும் பிழிகின்றவாரு இருக்கும் . அண்ணாத்த படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகிக் கொண்டே இருக்க இப்பொழுது என்னுயிரே வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. தங்கை காணாமல் போன துயரத்தில் வாடும் ரஜினியின் அட்டகாசமான நடிப்பில் வெளியாகியுள்ள இந்த "என்னுயிரே" பாடல் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











