twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலிவுட் குறித்து அவதூறு செய்தி: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் சேனல்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

    |

    டெல்லி: பாலிவுட் குறித்து அவதூறு செய்திகளை ஒளிபரப்பவில்லை என்பதை உறுதிபடுத்துமாறு டைம்ஸ் நவ் மற்றும் ரிபப்ளிக் ஆகிய ஊடகங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து சில செய்தி ஊடகங்கள், பாலிவுட்டை இழிவுபடுத்தும் வகையில் செய்திகளை ஒளிபரப்பியதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    பாலிவுட் நடிகர்கள், ஷாரூக்கான், சல்மான்கான், கரன்ஜோகர், ஆமீர்கான், அஜய்தேவ்கான், அக்சய்குமார், அனில்கபூர், நடிகைகள், அனுஷ்கா ஷர்மா, தியா மிர்ஷா, ஜோயா அக்தர், உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் பாலிவுட்டின் 34 படத்தயாரிப்பாளர்கள் இணைந்து இந்த வழக்கை தொடர்ந்தனர்.

    இரண்டு சேனல்கள்

    இரண்டு சேனல்கள்

    ரிபப்ளிக் மற்றும் டைம்ஸ் நவ் சேனல்கள் பாலிவுட்டுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் எதிராக அவதூறான விஷயங்களைப் பேசுவதை நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் தொடரப்பட்ட இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    பயப்படுகிறார்கள்

    பயப்படுகிறார்கள்

    அப்போது. பாலிவுட்டுக்கு எதிராக அவதூறான செய்திகள் எதுவும் ஒளிபரப்பப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என டெல்லி ஹைகோர்ட், ரிபப்ளிக் மற்றும் டைம்ஸ் நவ் சேனல்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் மக்கள் மீடியா மற்றும் ஊடகங்களை பார்த்து பயப்படுகிறார்கள்" என்றும் இதனை "குறைக்க வேண்டும்" என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது,

    நடுநிலையை எதிர்பார்க்கிறோம்

    நடுநிலையை எதிர்பார்க்கிறோம்

    பாலிவுட்டுக்கோ அல்லது அதன் உறுப்பினர்களுக்கோ எந்தவொரு அவதூறு செய்தியும் ஒளிபரப்பப்படாமல் இருக்க செய்தி சேனல்களைக் கேட்டுக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், ஊடகங்களிலிருந்து நியாயமான அறிக்கை மற்றும் நடுநிலையை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது. மக்கள் "ஊடகங்களை பற்றி மிகவும் பயப்படுகிறார்கள்" என்றும் டெல்லி ஹைகோர்ட் கூறியுள்ளது.

    எழுத்துப்பூர்வ அறிக்கை

    எழுத்துப்பூர்வ அறிக்கை

    பாலிவுட் பிரபலங்களின் முப்பத்தெட்டு முன்னணி இந்தி சினிமா சங்கங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் ஊடகங்களுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்குக்கு பதிலளிக்கும் வகையில் செய்தி சேனல்கள் எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் ஹைகோர்ட் கேட்டுக்கொண்டது.

    தூர்தர்ஷன் திரும்பி வரவேண்டும்

    தூர்தர்ஷன் திரும்பி வரவேண்டும்

    மேலும் இந்தி சினிமா சங்கங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள், அதன் ஒரு பகுதியான ஊடகங்களுக்கு எதிராய் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜீவ் ஷக்தர், "நாங்கள் தூர்தர்ஷனை மிகவும் பழமையானதாகக் கண்டோம். தூர்தர்ஷன் திரும்பி வர விரும்புகிறேன். அப்போது அவர்களிடம் சில அழகான ஒளிபரப்பாளர்கள் இருந்தனர், " என்றார்.

    குறைக்க வேண்டும்

    குறைக்க வேண்டும்

    ஊடக சேனல்கள் சிலவற்றை "குறைக்க வேண்டும்" என்றும், ஊடக சேனல்கள் நிகழ்ச்சி நிரல் குறியீட்டைப் பின்பற்றவில்லை என்றும் டெல்லி ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. நீங்கள் (புதிய சேனல்கள்) சுய கட்டுப்பாட்டைப் பின்பற்றவில்லை என்றால், இது போன்ற ஒரு விஷயத்தில் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் சிக்கல்களை முன்கூட்டியே முன்வைக்கிறீர்கள். இதில் குறைவான செய்தி மற்றும் அதிக கருத்து என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியது.

    விசாரணை ஒத்திவைப்பு

    விசாரணை ஒத்திவைப்பு

    தொடர்ந்து "இது வருத்தமளிக்கிறது மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.. இது அனைவரையும் மனச்சோர்வடையச் செய்கிறது. இன்று எங்களை அது (நீதித்துறை) காயப்படுத்தவில்லை... அது நாளை உங்கள் சகோதரத்துவம் என்று வைத்துக்கொள்வோம். நிச்சயமாக, நீங்கள் விசாரிக்க முடியும், ஆனால் அது நியாயமான அறிக்கையாக இருக்க வேண்டும், "என்று டைம்ஸ் நவ் சேனலின் வழக்கறிஞர் உரையாற்றும் போது டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது. மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    English summary
    Delhi High court tells Republic TV and Times now to ensure no defamatory content against in Bollywood. Delhi high court also said people “are very scared of the fourth estate”.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X