twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேளிக்கை வரி போட்டாச்சு... இன்னும் உயர்கிறது சினிமா டிக்கெட் விலை!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : தமிழகத்தில் ஜி.எஸ்.டி-யோடு சேர்த்து விதிக்கப்பட்ட 30% கேளிக்கை வரியை எதிர்த்து திரைத்துரையினர் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் திரையரங்குகள் மூடப்பட்டன.

    பிறகு அந்த கேளிக்கை வரி அமலாகாமல் இருந்தது. இந்நிலையில், திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கேளிக்கை வரி தற்போது 10% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

    இப்போது வரை 30% ஆக இருந்த கேளிக்கை வரி தற்போது 20% குறைக்கப்பட்டு 10% ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது செப்டம்பர் 27-ம் தேதியை முன்தேதியிட்டு தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது.

    தமிழ் படங்களுக்கு :

    தமிழ் படங்களுக்கு :

    புதிய தமிழ் படங்களுக்கு 10% வரியும், மற்ற மொழிப் படங்களுக்கு 20% கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு 7% கேளிக்கை வரியும், மற்ற மொழித் திரைப்படங்களுக்கு 14% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

    விலை உயரும் :

    விலை உயரும் :

    ஜி.எஸ்.டி அமலுக்கு வந்ததில் இருந்து கேளிக்கை வரி சேர்க்கப்படாமலேயே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது இந்த கேளிக்கை வரியும் சேர்க்கப்பட உள்ளதால் டிக்கெட் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

    ஜி.எஸ்.டி-யால் விலை உயர்வு :

    ஜி.எஸ்.டி-யால் விலை உயர்வு :

    ஏற்கெனவே ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டபோது, மல்டிஃப்ளெக்ஸ் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் வில்லை 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகரித்தது. சினிமா ரசிகர்கள் அதைக் குறைக்கும்படி வலியுறுத்தி வரும்போது மீண்டும் உயர இருக்கிறது.

    தியேட்டர்கள் முடிவு :

    தியேட்டர்கள் முடிவு :

    வரும் புதன்கிழமை நடைபெறும் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டத்திற்கு பிறகு கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

    English summary
    The entertainment tax that was 30% has now been reduced by 20% and has been fixed at 10%. The order came into effect on September 27th in Tamil Nadu. Since cinema tickets has been sold without being added to the entertainment line with GST, so, the ticket price is currently high.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X