எந்திரன் 2ல் ரஜினியும் இல்லை, அஜீத்தும் இல்லை.. அப்ப ஆமீர் கான்?
சென்னை: எந்திரன் 2 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பதில் பாலிவுட் நடிகர் ஆமீர் கானை நடிக்க வைக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2010ம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான படம் எந்திரன். ரஜினி ரோபோவாக நடித்த சிட்டி கதாபாத்திரம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
படம் வசூலிலும் சக்கை போடு போட்டு இயக்குனர் ஷங்கரின் மனதை குளிர வைத்தது.

எந்திரன் 2
எந்திரன் 2ம் பாகத்தை எடுக்க ஷங்கர் முடிவு செய்துள்ளார். இதிலும் ரஜினிகாந்தை நடிக்க வைக்கவே அவர் விரும்புகிறார்.

ரஜினி
ஷங்கர் ரஜினிகாந்தை சந்தித்து எந்திரன் 2ம் பாகத்திலும் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். படத்தில் நடிக்க ரஜினிக்கும் விருப்பம் தான்.

அஜீத்
ரஜினிகாந்த் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு எந்திரன் 2 படத்தில் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ஷங்கரிடம் அஜீத் குமாரின் பெயரை பரிந்துரை செய்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

ஆமீர் கான்
ஷங்கர் எந்திரன் 2 படத்தை மெகா பட்ஜெட்டில் எடுக்க முடிவு செய்துள்ளார். அந்த படத்தில் ரஜினிக்கு பதில் பாலிவுட்டில் பர்ஃபெக்ஷனிக்ஸ்ட் என்று அழைக்கப்படும் ஆமீர் கானை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளாராம்.

3 மொழிகள்
எந்திரன் 2 படத்தை ரூ. 250 கோடி பட்ஜெட்டில் எடுத்து அதை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியிட ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











