twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இழுத்தடிக்கும் எந்திரன் வழக்கு: ஷங்கருக்கு ரூ. 10,000 அபராதம் விதித்த ஹைகோர்ட்

    By Siva
    |

    சென்னை: எந்திரன் பட வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் எந்திரன். அந்த படத்தின் கதை தன்னுடையது என்று கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2010ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

    Enthiran case: Chennai HC imposes Rs. 10,000 fine on Shankar

    தனது கதையை திருடி படம் எடுத்ததற்காக தனக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் ஷங்கர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம். சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஷங்கர் ஆஜராகவில்லை. மேலும் அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞரோ வழக்கு விசாரணை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரினார்.

    வழக்கை தள்ளி வைக்க மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். ஷங்கர் வேண்டும் என்றே வழக்கை இழுத்தடிப்பதாக அவர் கூறினார்.

    விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி நேரில் ஆஜராகாத ஷங்கருக்கு ரூ. 10 ஆயிரம்(வழக்கு செலவு) அபராதம் விதித்தார். இந்த தொகையை அவர் வரும் 10ம் தேதிக்குள் விலங்குகள் நல அமைப்பான ப்ளூகிராஸில் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    English summary
    Chennai high court on moday imposed a fine of Rs. 10,000 on director Shankar in connection with Enthiran case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X