எல்லாமே சுத்த பொய்.. சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.. பாலியல் புகார்.. கொந்தளித்த நிவின் பாலி!

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகார் பெரும் பரபரப்பைக் கிளப்பி இருந்த நிலையில், இது தொடர்பாக அவரே விளக்கமளித்துள்ளார். தன் மீதான பாலியல் புகார்கள் பொய்யானது என்று சொன்ன நிவின் பாலி, இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

கேரளாவில் நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவிடம் பல பெண்கள் பல சினிமா பிரபலங்கள் மீது வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

nivin pauly hema committee sexual assault

அந்த பெண்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளில் எந்தவொரு ஆதாரமும் இல்லை என நடிகர்களும் சினிமா பிரபலங்களும் மறுத்து வரும் நிலையில், தற்போது நடிகர் நிவின் பாலி மீதும் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு ஒன்று பாய்ந்துள்ளது.

நிவின் பாலி மறுப்பு: நேரம், பிரேமம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பலாத்கார புகார் அளித்த நிலையில், அந்த செய்தியில் எந்தவொரு உண்மைத்தன்மையும் இல்லை என்றும் தான் எந்தவொரு குற்றத்தையும் புரியவில்லை என அதிரடியாக மறுத்துள்ளார் நடிகர் நிவின் பாலி.

சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: தன்னை பற்றி அவதூறு பரப்பியவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தேன் எனக் கூறுவதில் துளி அளவும் உண்மை இல்லை என நடிகர் நிவின் பாலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

nivin pauly hema committee sexual assault

பாலியல் குற்றச்சாட்டு: வெளிநாட்டில் ஷூட்டிங் ஒன்றின் போது சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புத் தருவதாகக் கூறி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் நிவின் பாலி எனக் குற்றம்சாட்டிய அந்த இளம் பெண் நிவின் பாலி உள்பட 6 பேர் மீது புகார் அளித்துள்ளார். நிவின் பாலி மற்றும் அவருடன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள 6 பேர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X