twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவை அணு அணுவாக பார்த்து ரசிக்க முதல் எபிக் திரையரங்கம் சூலூர்பேட்டையில் ரெடி

    |

    சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக அகண்ட திரைகொண்ட பார்வையாளர்களை திரையோடு ஒன்றச் செய்யும் புதிய அனுபவத்தை தரவல்ல எபிக் என்ற திரையரங்கை அறிமுகப்படுத்துகிறது க்யூப் சினிமா நிறுவனம். க்யூப் சினிமா அறிமுகப்படுத்தும் எபிக் திரையரங்கு திரையோடு ரசிகர்களை ஒன்றச் செய்யும் புதிய அனுபவம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தை பெற தயாராகுங்கள் ரசிகர்களே.

    இந்தியாவின் முதலாவது எபிக் திரை, தெற்காசியாவின் மிகப்பெரிய எபிக் திரை என்ற சிறப்பம்சத்தோடு ஆந்திரப்பிரதேச மாநிலம், சூலூர்பேட்டையில் வி எபிக் என்ற திரையரங்கு உருவாக்கப்பட்டுள்ளது. திரையரங்கின் ஒவ்வொரு இருக்கையும் திரைப்படத்தை அணுஅணுவாக ரசித்துப் பார்க்கும் வகையில் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து விதமான நவீன தொழில்நுட்பங்களும் இந்த எபிக் திரையரங்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது எபிக் திரையின் சிறப்பம்சமாகும்.

    Epiq Screen introduced first time in Southern Aisa

    சாஹோ திரைப்படத்தின் முக்கிய கலைஞர்கள் பங்கேற்க எபிக் திரையரங்கின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய க்யூப் சினிமாஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹர்ஷ் ரோஹத்கி, இந்தியர்கள் வாழ்வில் திரையரங்குகள் பிரிக்க முடியாத அங்கமாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், நம்பமுடியாத ஆச்சர்யங்களுடன், முதல் தரமான அம்சங்களுடன், வீட்டில் தொலைக்காட்சிகளில் பார்த்தால் ஒருபோதும் கிடைக்காத அனுபவத்தை தரக்கூடிய வகையில் இந்த எபிக் திரையரங்கு இருக்கும் என்றார்.

    இந்த எபிக் திரையை பயன்படுத்துவது குறித்து நாடு முழுவதும் உள்ள வெளியீட்டாளர்களிடம் தாங்கள் பேசிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தாண்டு இறுதிக்குள் பல இடங்களில் இத்தகைய எபிக் திரைகள் நடைமுறைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஹர்ஷ் ரோஹத்கி நம்பிக்கை தெரிவித்தார்.

    இரண்டு சுவர்களுக்கும் இடையே நூறு அடி அகலத்திற்கு பரந்து விரிந்து காணப்படுவது தான் எபிக் திரையின் முதலாவது சிறப்பம்சம். திரையரங்கின் ஒவ்வொரு இருக்கையும் திரைப்படத்தை அணுஅணுவாக ரசித்துப் பார்க்கும் வகையில் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து விதமான நவீன தொழில்நுட்பங்களும் இந்த எபிக் திரையரங்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    4கே ஆர்ஜிபி லேசர் ப்ரொஜெக்ஷன், டால்பி அட்மோஸ் ஒலியமைப்பு, திரையில் உள்ள ஒவ்வொரு பொருளும் அது ஸ்கோப்-ஆக இருந்தாலும் தட்டையாக இருந்தாலும் மிகத்தெளிவாக தெரியும் வகையில் 1:1.9 விகிதாசாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பளிச்சென்று தெரியும் ஒளியும், ஒவ்வொரு நிறமும் மிகத் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையிலான திரையும் இதன் தனித்துவங்களில் ஒன்று.

    பரிட்சார்த்த ரீதியில் டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்ட திரைப்படங்களையும் இந்த எபிக் திரையரங்கில் திரையிடலாம். மேலும் இதில் திரையிடுவதற்கு என்று டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களையும் எபிக் உருவாக்கி உள்ளது.

    நாட்டிலேயே முதலாவது எபிக் திரையரங்கானது, வி எபிக் என்ற பெயரில் சூலூர்பேட்டையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. சூலூர்பேட்டை, ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஸ்ரீசிட்டி ஆகிய நகரங்களில் வசிப்போர் இந்த எபிக் திரையரங்கை முதலில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மொத்தம் மூன்று திரைகளை கொண்ட இந்த எபிக் திரையரங்கம் வி செல்லுலாயிட் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

    வி செல்லுலாயிட் நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல தயாரிப்பாளருமான வம்சி கிருஷ்ணா பேசும்போது, இந்திய பெருநகரங்களில் கூட கிடைக்காத ஒரு வாய்ப்பை சூலூர்பேட்டையில் கொண்டுவந்து சினிமா பார்ப்பதில் ஒரு புரட்சியை உண்டாக்கி இருக்கிறோம். அதிலும் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய திரையை அறிமுகப்படுத்துகிறோம் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

    எங்களது இலக்கை அடுத்த கட்டத்திற்கு எபிக் கொண்டு செல்கிறது. அதாவது அட்டகாசமான சூழல், உயர்தர தொழில்நுட்பம் இவற்றின் வாயிலாக முன்னெப்போதும் இல்லாத வகையில், ரசிகர்களை அதிக அளவில் திரையரங்கு நோக்கி படையெடுக்க வைக்கும் இந்த எபிக் என்றார் வம்சி கிருஷ்ணா.

    பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள சாஹோ திரைப்படம் தான் எபிக் திரையில் திரையிடப்படும் முதலாவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளார் ஆர்.மதி பேசும்போது, திரைத்துறையில் எபிக் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

    வணிகரீதியான படங்களை எடுத்து காட்டுவதில் எபிக் மிகப்பெரிய துணை நிற்கும் என்றும் அவர் கூறினார். ஒளி, ஒலி இன்னபிற அம்சங்களில் தனித்துவமிக்க ஒரு அனுபவத்தை ரசிகர்கள் இந்த எபிக் திரையின் மூலம் பெறுவது நிச்சயம் என்றும் இதனால் எங்களது படைப்பூக்கமும் அதிகரிக்கும் என்றும் ஆர்.மதி தெரிவித்தார்.

    எபிக் தொடர்பான தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்த விவரங்களுக்கு [email protected] இந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    க்யூப் சினிமா

    க்யூப் சினிமா நிறுவனமானது டிஜிட்டல் சினிமா உலகில் அ முதல் ஃ வரையிலான அனைத்து விதமான சேவைகளையும், தீர்வுகளையும் தருகிறது. பல ஆண்டுகளாக திரைத்துறையில் இயங்கிய அனுபவம் இந்நிறுவனத்திற்கு உண்டு. தடையில்லா டிஜிட்டல் வெளியீட்டிற்கு காரண கர்த்தாவாகவும், டிஜிட்டல் தயாரிப்பு தொடர்பான அனைத்துவித கருவிகளும் நியாயமான விலையிலும் இந்நிறுவனத்திடம் உண்டு. கூடுதல் தகவல்களுக்கு www.qubecinema.com இந்த இணையதளத்தை பார்வையிடலாம்.

    வி செல்லுலாயிட் நிறுவனம்

    இந்தியாவின் சிறுநகரங்களில் உலகத்தரத்திலான திரையரங்கு அனுபவத்தை தரும்நோக்கில் கடந்த 2012ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் இந்நிறுவனம். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இதுவரை மொத்தம் 50 திரையரங்குகள் வி செல்லுலாயிட் நிறுவனத்திற்கு உள்ளன. சிறந்த ஒளி-ஒலி அமைப்பு, சுகாதாரமான சுற்றுப்புற சூழல், நவீன தொழில்நுட்பம், தரமும், சுவையும் கூடிய உணவு வகைகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து தருவதற்கு முக்கியத்துவம் தருகிறது வி செல்லுலாயிட் நிறுவனம்.

    விவரங்களுக்கு
    சோனாலி சேத்
    க்யூப் சினிமா, பெருநிறுவன தொடர்பு மேலாளர்

    Read more about: saaho சாஹோ
    English summary
    Every seat of the theater is designed to make the movie enjoyable. The Epic Theater has used all the modern technologies of the country at Sullerpet, Andhra Pradesh.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X