காசுக்காக கண்டபடி நடிக்க முடியாது.. போல்ட் எனும் பெயரில் நடக்கும் மோசடி.. வெளுத்து விட்ட நடிகை!

மும்பை: பிரபல சின்னத்திரை நடிகை எரிகா ஃபெர்னாண்டஸ் போல்ட் எடும் பெயரில் படு ஆபாசமாக நடிக்கும் வாய்ப்புகள் வருவதாகவும் தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஏகப்பட்ட இந்தி தொலைக்காட்சி ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக கலக்கி வருகிறார் நடிகை எரிகா ஃபெர்னாண்டஸ்.

வெப் தொடரில் நடிக்கும் வாய்ப்புகள் குவிவதாகவும், ஆனால், போல்ட் கன்ட்டென்ட் கதைகளே தனக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பரத் படத்தில்

பரத் படத்தில்

இயக்குநர் சசி இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான ஐந்து ஐந்து ஐந்து படத்தில் மஞ்சரி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் எரிகா ஃபெர்னாண்டஸ். மேலும், விரட்டு மற்றும் விழித்திரு உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்தி சீரியல்களில்

இந்தி சீரியல்களில்

மும்பை பெண்ணான இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்த நிலையில், இந்தி சீரியல்களில் லீடு ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அப்படியே சீரியல் நடிகையாகவே மாறிவிட்டார். 2016ம் ஆண்டு வெளியான குச் ரங் பியார் கே ஐஸே பி எனும் வெப் தொடர் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்தது.

போல்டாக நடிக்க

போல்டாக நடிக்க

இந்தி சீரியல்களில் பிரபலமான எரிகாவுக்கு ஏகபட்ட வெப் தொடர்களில் நடிக்கும் வாய்ப்புகள் வருவதாகவும், ஆனால், போல்டாக நடிக்க வேண்டும் என ஆபாச காட்சிகள் நிறைந்த கதைகளையே இயக்குநர்கள் கூறி வருகின்றனர் என்றும் தனக்கு அதில் நடிக்க உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

காசுக்காக பண்ணமாட்டேன்

காசுக்காக பண்ணமாட்டேன்

வெப் தொடர்களில் சரியான கதைகளே இல்லாமல் வெறும் காசு சம்பாதிக்கும் நோக்கத்திலேயே பல படைப்பாளிகள் இது போன்ற ஆபாச வெப் தொடர்களை உருவாக்கி வருவதாகவும், எந்தவொரு காரணமும் இன்றி போல்டாக நடிக்க வேண்டும் என்றால் எப்படி நடிக்க முடியும் என நான் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடத்தில் பதில்களே இல்லை என பளிச்சென கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

திணிக்கின்றனர்

திணிக்கின்றனர்

போல்ட் எனும் பெயரில் இது போன்ற தேவையில்லாத காட்சிகளை கமர்ஷியல் மற்றும் வியாபார நோக்கத்துடன் திணிப்பது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. கதைக்கு முக்கியமாக இருந்தால் அப்படி நடிப்பதில் எனக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை. ஆனால், சினிமாவில் போல்டாக நடிக்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது. அதற்கான மூலக் காரணம் என்ன என சிந்திப்பதால் என்னால் அதற்கு சம்மதம் தெரிவிக்க முடியவில்லை என்றுள்ளார்.

Recommended Video

அசத்தலாக களமிறங்கிய Samantha Family Man 2 Trailer | Manoj Bajpai
பிக் பாஸுக்கும் நோ

பிக் பாஸுக்கும் நோ

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எண்ணம் இருக்கிறதா என்கிற கேள்விக்கு பதில் அளித்த அவர், அது என்னுடைய கப் ஆஃப் டீ இல்லை என்று அதற்கும் நோ சொல்லி விட்டார். சின்னத்திரை தொடர்களில் நடிப்பதே தனக்கு நிறைவாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதாகவும் எரிகா கூறியுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X