என்னை அறிந்தால் படத்தின் இசை உரிமையைப் பெற்றது ஈராஸ்!
அஜீத் நடிக்கும் என்னை அறிந்தால் படத்தின் இசை வெளியீட்டு உரிமையை வாங்கியது சவுந்தர்யா ரஜினிகாந்த் தலைமையிலான ஈராஸ் நிறுவனம்.
இதுவரை இசை வெளியீட்டில் இறங்காமல் இருந்த ஈராஸ் நிறுவனம், சவுந்தர்யா ரஜினி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கத்தி படத்தின் இசை உரிமையைப் பெற்றது.

அடுத்து ரஜினி நடித்து வெளிவரவிருக்கும் லிங்கா படத்தின் இசை உரிமையை ரூ 7 கோடி கொடுத்துப் பெற்றது.
அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஎம் ரத்னம் தயாரிப்பில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிக்கும் என்னை அறிந்தால் இசை உரிமையைப் பெற்றுள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் படத்தின் இசை வெளியீடு நடக்கவிருக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications