கோச்சடையானுக்கு அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றது ஈராஸ்!
சென்னை: கோச்சடையானுக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் புதுப் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றது ஈராஸ் நிறுவனம்.
லண்டனைச் சேர்ந்த ஈராஸ் நிறுவனம் தென்னிந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமாவில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

கோச்சடையான்
இப்போது ரஜினி - தீபிகா நடிப்பில், சவுந்தர்யா ரஜினி இயக்கத்தில் வெளியாகவுள்ள கோச்சடையான் படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை உலகமெங்கும் அய்ங்கரன் நிறுவனத்துடன் இணைந்து வெளியிடுகிறது.

கேஎஸ் ரவிக்குமார் - ரஜினி படம்
கோச்சடையானுக்குப் பிறகு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படம் நடிக்கிறார் ரஜினி. இந்தப் படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தை வெளியிடும் உரிமையை ஈராஸ் நிறுவனமே பெற்றுள்ளது.

அஜீத் படம்
அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் - அனுஷ்கா நடிக்கும் புதிய படத்தையும் ஈராஸ் நிறுவனம்தான் வெளியிடுகிறது. படத்தைத் தயாரிப்பவர் ஏஎம் ரத்னம்.

கத்தி
விஜய் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படமான கத்தியை அய்ங்கரனும் லைக்கா புரொடக்ஷனும் தயாரிக்க, அதை வெளியிடும் உரிமை ஈராஸ் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











