’எருமை சாணி’ ஹரிஜா கூடிய சீக்கிரமே அம்மாவாக போறாங்க.. வைரலாகும் வளைகாப்பு புகைப்படம்!

சென்னை: 'எருமை சாணி' யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ஹரிஜா, தனது வளைகாப்பு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

யூடியூப் வீடியோக்கள், குறும்படங்கள், சினிமா என நடித்து வந்த ஹரிஜா, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு 'எருமை சாணி' ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில், தற்போது தனது கணவர் அமர் உடன் வளைகாப்பு கொண்டாடிய புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

’எருமை சாணி’ ஹரிஜா

’எருமை சாணி’ ஹரிஜா

எருமை சாணி எனும் யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஹரிஜா. அந்த சேனலில் லீடு ரோலில் விஜய் மற்றும் ஹரிஜா இருவரும் ஏகப்பட்ட யூடியுப் வீடியோக்களில் இணைந்து நடித்து அசத்தினர். இவர்களது வீடியோ வந்தாலே உடனடியாக யூடியூப் டிரெண்டிங்கில் வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சி

சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சி

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக முக்கிய ரோலில் நடித்திருந்தார் ஹரிஜா. மேலும், அதர்வாவின் '100' ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

காதல் ரூமர்

காதல் ரூமர்

'எருமை சாணி' யூடியூப் சேனலில் வெளியான வீடியோக்களில் யூடியூபர் விஜய்க்கு ஜோடியாக நடித்த ஹரிஜாவுக்கும் அவருக்கும் காதல் என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர் என்றும், ஏற்கனவே இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதராகத் தான் வாழ்கின்றனர் என்றும் ஏகப்பட்ட காதல் ரூமர்கள் கிளம்பியதாக ஹரிஜாவே சொல்லி சில பேட்டிகளில் சிரித்துள்ளார்.

அமருடன் திருமணம்

அமருடன் திருமணம்

கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான அமருடன் இரு வீட்டார் சம்மதத்துடன் ஹரிஜா திருமணம் செய்து கொண்டார். மேலும், எருமை சாணி யூடியூப் சேனலில் தொடர்ந்து நடிக்கப் போவதில்லை என்கிற அறிவிப்பையும் அறிவித்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார். ஹரிஜாவுடன் சில குறும்படங்களில் இணைந்து நடித்தவர் அமர் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மா ஆகப்போறாரு

அம்மா ஆகப்போறாரு

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இருக்கும் வளைகாப்பு புகைப்படத்தை போட்டு, என்னன்னு கெஸ் பண்ணுங்க? பார்க்கலாம் என தனது ஜாலியான ஸ்டைலிலேயே சீக்கிரம் தான் அம்மாவாக போகும் சந்தோஷமான செய்தியை அறிவித்துள்ளார் ஹரிஜா. அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X