என்னை தேவதையாக்கிய தாய்மை.. நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோஷூட் நடத்திய 'எருமை சாணி' ஹரிஜா!

சென்னை: 'எருமை சாணி' ஹரிஜா நிறைமாத கர்ப்பத்துடன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

யூடியூப், குறும்படம், சினிமா என கலக்கி வந்த ஹரிஜா அமர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கர்ப்பமாக இருக்கும் அவர், சமீபத்தில் தனது வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கினார்.

எருமை சாணி

எருமை சாணி

சீரியல், சினிமாவை விட யூடியூப் நட்சத்திரங்கள் இளைஞர்கள் மத்தியில் சட்டென பிரபலமாகி விடுகின்றனர். எருமை சாணி எனும் யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஹரிஜா. தனது காமெடியான க்யூட் ரியாக்‌ஷன்கள் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

யூடியூப் டு சினிமா

யூடியூப் டு சினிமா

சீரியலில் நடித்து சினிமாவுக்கு போவது, குறும்படம் எடுத்து சினிமாவுக்கு போவது என்கிற காலமெல்லாம் மாறி யூடியூப் வீடியோக்கள், டிக்டாக் வீடியோக்கள் செய்தே தங்களின் திறமையை காட்டி யார் வேண்டுமானாலும் சினிமாவுக்கு போகும் அளவுக்கு சோஷியல் மீடியா வளர்ந்துள்ளது. சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல், அதர்வாவின் '100', ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கல்யாணமாகிடுச்சு

கல்யாணமாகிடுச்சு

'எருமை சாணி' சேனலில் லீடு ரோலில் நடிக்கும் விஜய்யுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த ஹரிஜா, சட்டென அமர் என்பவருடன் திருமணம் செய்து கொண்டது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. விஜய் எனக்கு நல்ல நண்பர் தான், அமரைத் தான் நீண்ட காலமாக காதலித்து வருகிறேன் என ஹரிஜா விளக்கி இருந்தார்.

கண்டு பிடிங்க

கண்டு பிடிங்க

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் அமருடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு, என்னன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம் என கேள்வி எழுப்ப, ரசிகர்கள், அம்மாவாக போறீங்களா.. சூப்பருங்க என வாழ்த்த ஆரம்பித்து விட்டனர். அவரும் நீங்க கெஸ் பண்ணது சரி தான் என தனது வளைகாப்பு புகைப்படங்களை ஷேர் செய்தார்.

தேவதையாக்கிய தாய்மை

தேவதையாக்கிய தாய்மை

இந்நிலையில், தற்போது அப்படியே ஒரு ஏஞ்சல் போல நீல நிற கவுன் அணிந்து நிறைமாத கர்ப்பத்துடன் ஹரிஜா எடுத்துக் கொண்ட போட்டோக்களை பதிவிட்டு தனது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஹரிஜாவின் இந்த பேபி பம்ப் போட்டோஷூட்டுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன.

சந்தோஷ தருணம்

சந்தோஷ தருணம்

தனது வயிற்றில் ஒரு கரு பத்து மாதங்கள் வளர்கிறது என்பது எல்லா பெண்களுக்குமே பூரிப்பை தரும் ஒரு விஷயம் தான். இந்த தருணத்தை மொத்தமாக கொண்டாடி வருகிறேன். ஒவ்வொரு நிமிடமும் சந்தோஷமாக இருக்க முயற்சித்து வருகிறேன் என கேப்ஷன் போட்டு ஹரிஜா இந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X