உன் பாய் ஃப்ரெண்ட் தான் மிட் நைட்ல கால் பண்ணி அசிங்கமா பேசினான்.. விஜய் குமார் மனைவி விளாசல்!

சென்னை: ரெசார்ட் வெப்சீரிஸில் நடித்த வந்த அனுகிரகா நம்பியார் தன்னை ஏமாற்றிவிட்டனர் என்றும் சரியான வாய்ப்புகளை வழங்காமல் ஒரு வருட அக்ரிமெண்ட் போட்டு பணமும் தராமல் ஏமாற்றுகின்றனர். இதற்கெல்லாம் முக்கிய காரணமே எருமை சாணி விஜய் குமாரும் அவரது மனைவி நக்‌ஷத்ராவும் தான் என்றும் அதனால் சூசைட் பண்ணிக்கப் போவதாக பகீர் வீடியோவை அழுதுகொண்டே வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விஜய் குமார் ராஜேந்திரனின் மனைவி நக்‌ஷத்ரா மூர்த்தி ஆமாம் நான் போன வைடா ம*று என சொன்னது உண்மை தான். ஆனால், ஏன் சொன்னேன் என்பதை கேளுங்க என வீடியோ வெளியிட்டு நீண்ட விளக்கத்தை கொடுத்துள்ளார்.

Eruma Saani Vijay Kumar Rajendran Wife Nakshatra Murthy explains and slams Anugraha Nambiar
Photo Credit:

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ரெசார்ட் வெப்சீரிஸில் ஹீரோவாக நடித்து வரும் எருமை சாணி விஜய் மற்றும் அவரது மனைவி நக்‌ஷத்ரா மூர்த்தி மீது அனுகிரகா அடுக்கிய ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் நக்‌ஷத்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

நாங்க தயாரிப்பாளர்கள் அல்ல: குளோபல் வில்லேஜ் தான் இந்த வெப்சீரிஸின் தயாரிப்பாளர்கள். அனுகிரகா உனக்கு பணம் வேண்டும் என்றால் அவங்க கிட்டத்தான் கேட்க வேண்டும். அதே போல உனக்கு சீன்ஸ் கம்மியா இருந்தா டைரக்டரிடம் தான் கேட்க வேண்டும். அதற்கு பதிலாக மிட் நைட்டில் போன் பண்ணி அதுவும் உன் பாய் ஃபிரெண்ட் என்னிடம் அசிங்கமா பேசினால் நான் சும்மா இருப்பேனா என நக்‌ஷத்ரா விளக்கம் அளித்துள்ளார்.

உன் பாய் ஃபிரெண்ட் தான் அசிங்கமா பேசினான்: மிட் நைட் 11.30 மணிக்கு என் கணவருக்கு போன் செய்தது யாரென்றே தெரியவில்லை. ஒரு புரொபசனலாக இருக்கும் போது நீ தான் பேசியிருக்க வேண்டும். உன் சோ கால்ட் பாய் ஃபிரெண்ட் போன் பண்ணி கத்திட்டு இருக்கான். என் கணவருக்கு மலையாளம் தெரியாததால் நான் வாங்கி பேசினேன். அவன் தான் முதலில் அசிங்கமா பேசினான். அதன் பின்னர் தான் நான் போனை வைடா ம*று என திட்டினேன். பெண்களே நீங்களே சொல்லுங்க யாருன்னே தெரியாத ஒரு ரேண்டம் நபர் நைட் போன் செய்து கத்திக் கொண்டிருந்தால் திட்டத்தானே செய்வார்கள். இதுக்கு இவ்ளோ பெரிய டிராமா போடுற அனுகிரகா விளக்கம் கொடுத்தாக வேண்டும் என பேசியுள்ளார்.

என் குழந்தைக்கு கூட சாபம்: அனுகிரகா திட்டமிட்டு சதி செய்து இப்படியொரு டிராமாவை போட்டுள்ளார். எங்க பக்கத்து நியாயத்தைக் கூட கேட்காமல் என்னை அசிங்க அசிங்கமாக திட்டுறீங்க, அதை தாண்டி என் பையன் வரை உருப்படமாட்டான் என சாபம் விடுறீங்க. அக்ரிமெண்ட் படித்து பார்த்து சைன் பண்ணிருக்கனும், ஆடிஷனுக்கு வர நாம தான் செலவு பண்ணனும் என அனுகிரகா அழுது புலம்பி அடுக்கிய குற்றச்சாட்டுகளுக்கும் சோஷியல் மீடியாவில் தனக்கும் தனது கணவர் விஜய்க்கும் ஏற்பட்ட நெகட்டிவிட்டிக்கு பதிலடி கொடுத்துள்ளார் நக்‌ஷத்ரா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X