கல்யாண வைப் ஆரம்பம்.. திருமணத்திற்கு ரெடியான எரும சாணி விஜய்.. அவரோட வருங்கால மனைவியை பாருங்க!

சென்னை: எரும சாணி யூடியூப் மூலம் பிரபலமான விஜய் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்து தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு ஷேர் செய்துள்ளார்.

விஜய் மற்றும் ஹரிஜா இணைந்து எரும சாணி யூடியூப் சேனலில் காமெடியான வீடியோக்களை போட்டு பல ஆண்டுகளாக ரசிகர்களை சிரிக்க வைத்து வந்தனர்.

இருவரும் காதலிப்பதாக ரூமர்கள் கிளம்பிய நிலையில், ஹரிஜா தனது திருமணத்தை அமர் என்பவருடன் செய்து கொண்டார்.

எரும சாணி விஜய்

எரும சாணி விஜய்

திறமை இருந்தால் போதும் சின்னதாக யூடியூப் சேனல் ஆரம்பித்தே தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம் என்பதை அறிந்த ஏகப்பட்ட இளைஞர்கள் யூடியூப் சேனல்களை ஆரம்பித்து வீடியோக்களை போட ஆரம்பித்தனர். அதில், ஒருவர் தான் விஜய்யும். எரும சாணி என வித்தியாசமான டைட்டிலில் ஆரம்பிக்கப்பட்ட யூடியூப் சேனலில் விஜய் மற்றும் ஹரிஜா கணவன் மனைவியாகவும், காதலர்களாகவும் செய்யும் ரகளைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

ஹரிஜா திருமணம்

ஹரிஜா திருமணம்

இருவரும் நெருக்கமாக ஜோடி போட்டு யூடியூப்களில் நடித்து வந்த நிலையில், ஹரிஜா மற்றும் விஜய் காதலிப்பதாக வதந்திகள் பரவின. ஆனால், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என சொல்லி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது மட்டுமின்றி அமர் என்பவரை ஹரிஜா திருமணம் செய்து கொண்டு தனியாக கணவருடன் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

6 வருட காதல்

6 வருட காதல்

எரும சாணி விஜய்யும் நக்‌ஷத்ரா எனும் பெண்ணை கடந்த 6 வருடங்களாக காதலித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு தனது காதலியை அறிமுகம் செய்தது மட்டுமின்றி பெண் பார்க்கும் படலம் என நிச்சயதார்த்தம் செய்து கொண்ட தகவலையும் தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.

கல்யாண வைப் பிகின்ஸ்

கல்யாண வைப் பிகின்ஸ்


கடந்த ஆண்டே இருவருக்கும் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விரைவில் விஜய் மற்றும் நக்‌ஷத்ரா திருமணம் செய்து கொள்ள உள்ளனர். காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலி மற்றும் வருங்கால மனைவியுமான நக்‌ஷத்ரா உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட விஜய் கல்யாண வைப் பிகின்ஸ் என கேப்ஷன் கொடுத்து விரைவில் திருமணம் ஆகப்போகும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஹரிஜா வாழ்த்து

ஹரிஜா வாழ்த்து

எரும சாணி விஜய் தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டு இப்படியொரு போஸ்ட்டை பார்த்த எரும சாணி ஹரிஜா நீ பார்க்கவே வித்தியாசமா இருக்க விஜய், இதுதான் மாப்பிள்ளை கலையா என கமெண்ட் போட்டு கலாய்த்துள்ளார். எரும சாணி யூடியூப் ரசிகர்கள் பலரும் விஜய் மற்றும் நக்‌ஷத்ராவை வாழ்த்தி வருகின்றனர்.

அருள்நிதி பட இயக்குநர்

அருள்நிதி பட இயக்குநர்

யூடியூபில் இருந்து சினிமாவுக்கு முன்னேறிய விஜய் நடிகர் அருள்நிதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டி பிளாக் திரைப்படத்தை இயக்கி இருந்தார். சைகோ கொலைகாரன் கதையாக உருவான அந்த த்ரில்லர் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. கூடிய சீக்கிரமே அடுத்த பட அறிவிப்பை விஜய் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X