ஆத்தி.. இதென்னம்மா சேலைக்கு வந்த சோதனை.. எருமை சாணி ஹரிஜாவின் டிரெஸ்ஸை பார்த்தீங்களா!
சென்னை: எருமை சாணி யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ஹரிஜா சேலையை வித்தியாசமாக மாடர்ன் உடை போல மாற்றியமைத்து அணிந்துக் கொண்டு நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
எருமை சாணி விஜய்யுடன் இணைந்து கொண்டு செம காமெடியாக யூடியூப் வீடியோக்களில் நடித்து வந்தவர் ஹரிஜா. அதன் பின்னர் அமர் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், எருமை சாணி யூடியூப் சேனலில் இருந்து விலகிவிட்டார் ஹரிஜா.

அதன் பின்னர் தனது கணவருடன் இணைந்துக் கொண்டு ஆல்பம் பாடல்களிலும், இன்ஸ்டாகிராமில் தனியாக போட்டோஷூட் நடத்தியும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
சேலையை வித்தியாசமாக உடுத்திய ஹரிஜா: ஒல்லி பெல்லி நடிகையான ஹரிஜா சேலையை ஒரு பக்கம் மட்டும் ஆடையாக அணிந்தது போல மாடர்ன் உடையாக மாற்றி அணிந்துக் கொண்டு நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

ப்பா எவ்ளோ மேக்கப்: சேலையை செம ஸ்டைலான ஃபேஷன் உடையாக மாற்றி அணிந்துக் கொண்டு போட்டோக்களை வெளியிட்ட ஹரிஜா தனது க்ளோஸ் அப் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ள நிலையில், அதனை பார்த்த அவரது ரசிகர்கள் ஜாலியாக ப்பா.. எவ்ளோ மேக்கப் என கலாய்த்து வருகின்றனர்.
மலையாள பாடலுக்கு நடனம்: "சிம்மி சிம்மி" எனும் மலையாள பாடலுக்கு சமீபத்தில் பாவாடை தாவணி அணிந்து கொண்டும் பவ்யமாக நடனம் ஆடிய வீடியோவையும் வெளியிட்டு தனது ரசிகர்களை ஜில்லாக்கி வருகிறார்.
குவியுது லைக்ஸ்: சுமார் 15 லட்சம் பேர் ஹரிஜாவின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களாக உள்ள நிலையில், அவர் வெளியிடும் லேட்டஸ்ட் ரீல் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் என அனைத்துமே சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.
ஹரிஜாவின் போஸ்ட்டுகளுக்கு க்யூட்டான கமெண்ட்டுகளும் அதே அளவுக்கு அக்கா நீங்க ஆடுற மாதிரி தெரியல உங்க வாய் மட்டும் தான் ஆடுதுன்னு பங்கமாகவும் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











