Esha Deol: சூர்யா ஹீரோயின் திடீர் விவாகரத்து.. 11 வருட திருமண வாழ்க்கையை முறித்த ஹேமா மாலினி மகள்!
மும்பை: 88 வயதாகும் மூத்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இரண்டாவதாக நடிகை ஹேமா மாலினியை திருமணம் செய்துக் கொண்டார். அந்த தம்பதியினருக்கு மூத்த மகளாக பிறந்தவர் தான் இஷா தியோல். தர்மேந்திராவின் முதல் தார மனைவிக்கு மகன்களாக சன்னி தியோல் மற்றும் அனிமல் பட வில்லன் பாபி தியோல் உள்ளிட்டோர் பிறந்தனர்
சூர்யா நடித்து வெளியான ஆயுத எழுத்து படத்தில் அவருக்கு ஜோடியாக மணிரத்னம் இயக்கத்தில் நடித்த இஷா தியோல் சிறு வயதில் இருந்தே காதலித்து திருமணம் செய்துக் கொண்டு 2 குழந்தைகளை பெற்ற நிலையில், 11 ஆண்டு காலம் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், திடீரென அதிரடியாக சமந்தா, நாக சைதன்யா, தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவித்ததை போல இருவரும் இனிமேல் சேர்ந்து வாழப் போவதில்லை என்கிற அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டு பாலிவுட் திரையுலகினரை மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளனர்.

தர்மேந்திரா - ஹேமா மாலினி மகள்: இந்தி சினிமாவில் கொடி கட்டிப் பறந்த தர்மேந்திராவுக்கும் ஹேமா மாலினிக்கும் 1980ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஹேமா மாலினியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துக் கொண்டார் தர்மேந்திரா. 1981ம் ஆண்டு திருமணமான ஒரே வருடத்தில் இஷா தியோல் பிறந்து விட்டார். அதன் பிறகு அவருக்கு அஹானா என்கிற ஒரு தங்கையும் உள்ளார். இஷா தியோல் பெரிய சினிமா குடும்பத்தில் பிறந்த நிலையில், அவரும் பாலிவுட்டில் ஹீரோயினாக 2002ம் ஆண்டு வெளியான கொய் மெரே தில் சே பூச்சே படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஆயுத எழுத்து ஹீரோயின்: மணிரத்னம் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான ஆயுத எழுத்து படத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இஷா தியோல் நடித்திருந்தார். இவருக்கும் இடையே ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வரும் “ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா” பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.
காதலருடன் திருமணம்: அந்த படத்திற்கு பிறகு தமிழில் இஷா தியோல் நடிக்கவில்லை. தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர், 2012ம் ஆண்டு பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்த பரத் தக்தானி என்பவருக்கு மும்பையில் உள்ள இஷ்கான் கிருஷ்ணர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. ராத்யா, மிராயா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

விவாகரத்து அறிவிப்பு: 2வதாக 2019ல் பெண் குழந்தை பிறந்ததில் இருந்தே இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு சின்ன சின்ன சண்டை வெடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாகவும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இனிமேல் சேர்ந்து வாழப் போவதில்லை என அறிவித்து அதிர்ச்சியை கிளப்பி உள்ளனர். தர்மேந்திரா, ஹேமா மாலினியின் மகள் இஷா தியோல் 2015ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. 42 வயதாகும் அவர், சமீபத்தில் டிவி நிகழ்ச்சிகளில் தலை காட்ட ஆரம்பித்தார். மீண்டும் நடிக்கப் போகிறாரா? என்றும் இஷா தியோலின் கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாரா என்றும் ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











