இவர்தாங்க அவர்.. தனது ஸ்பெயின் காதலரை போட்டோவுடன் அறிமுகப்படுத்திய பிரபல நடிகை.. தொழிலதிபராம்ல!

By

மும்பை: பிரபல நடிகை தனது காதலர் யார் என்பதை போட்டோவுடன் அறிமுகப்படுத்தி உள்ளார்.

Recommended Video

Sameera Reddy Shocking Childhood Photo | Neena Gupta Advice

பிரபல இந்தி நடிகை இஷா குப்தா. ஜன்னத் 2, அக்‌ஷய் குமாரின் ரஸ்டம், ஹன்ஷகல்ஸ், பாட்ஷாவோ, காமாண்டோ 2, ராஸ் 3 உட்பட பல பாலிவுட் படங்களில் கலக்கியுள்ளார்.

மாடலிங்கிலும் ஆர்வம் உள்ள இஷா குப்தா, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாடலுக்கும் கிளாமராக ஆடியுள்ளார்.

பரபரப்பு கிளப்புவார்

பரபரப்பு கிளப்புவார்

தமிழில் பிரபு, கிஷோர் நடித்த யார் இவன் என்ற படத்தில் நடித்துள்ளார். டி.வி.சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ள இஷா, அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை பதிவிட்டு பரபரப்பு கிளப்புவார். சமீபத்தில் கழண்ட ஜிப், கழண்ட லேஸ் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கிய அவர், பின்னர் ஒருபடி மேலே சென்று செம ஹாட் புகைப்படத்தை பதிவிட்டு அதிரடி காட்டினார்.

காதலர் போட்டோ

காதலர் போட்டோ

இந்நிலையில், இவர் ஒருவரை காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அவர் யார் என்பது பற்றி அதிகம் பேசாமல் இருந்தார். இந்நிலையில் தனது காதலரின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார், இஷா. ஸ்பெயினைச் சேர்ந்த தொழிலதிபர் மானுவல் கம்போஸ் குவால்லார் ( Manuel Campos Guallar) என்பவரை அவர் காதலித்து வருகிறார்.

லவ் யூ ஸோ மச்

லவ் யூ ஸோ மச்

இதை தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மானுவேலின் போட்டோவை பதிவிட்டு, அதில், ஐ லவ் யூ ஸோ மச் என்று கூறியுள்ளார். ஏதோ ஒரு ஸ்டார் ஓட்டல் லாபியில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் அது. இதையடுத்து அந்த போட்டோ ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை அள்ளியது. ஏராளமான நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்

தயார்படுத்தினேன்

தயார்படுத்தினேன்

இதற்கு முன், தனது காதலரை பற்றிய விவரங்களை சொல்லாமல் பேசிய அவர், என் பாய்பிரண்ட் ஸ்பெயினில் இருக்கிறார். கொரொனா அங்கு அதிகமாகப் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். அவர் ஏற்கனவே இந்த வைரஸ் பற்றி பேசிவருவதால், இந்த லாக்டவுனுக்கு என்னை தயார்படுத்திக் கொண்டேன். தினமும் அவரிடம் பேசி வருகிறேன்' என்று கூறியிருந்தார்.

பார்சிலோனா

பார்சிலோனா

ஏற்கனவே நடிகை ஸ்ரேயா, ரஷ்ய தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துவிட்டு, இப்போது ஸ்பெயினில் இருக்கிறார். அங்குள்ள பார்சிலோனாவில் வசிக்கும் ஸ்ரேயா, தினம் தனது கணவருடன் ஏதாவது போட்டோவை போட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார். இந்நிலையில் இஷா, ஸ்பெயின் தொழிலதிபரை காதலித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X