மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கையோடு பிகினி ஷூட் நடத்திய நடிகை
மும்பை: பாலிவுட் நடிகை இஷா குப்தா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் பிகினியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
பாலிவுட் நடிகை இஷா குப்தா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் படுக்கையில் படுத்திருந்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
தற்போது வீடு திரும்பியுள்ள அவர் பிகினி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

பிகினி
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கையோடு இஷா பிகினி அணிந்து புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

மகிழ்ச்சி
மருத்துவமனையில் உள்ளீர்களா, நீங்கள் சீக்கிரம் வீடு திரும்ப பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறிய ரசிகர்கள் தற்போது இஷாவின் புகைப்படங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கலாய்
இஷா குப்தா அவ்வப்போது தனது கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அதை பார்த்து சிலர் ஜொள்ளுவிட்டாலும், சிலர் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

என் அழகு
எப்படிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும் என்று எனக்கு தெரியும். யாரும் அறிவுரை வழங்க வேண்டாம் என்று தன்னை விமர்சிப்பவர்களுக்கு தெரிவித்துள்ளார் இஷா.

விமர்சனம்
முன்னதாக இஷா தனது நிர்வாண புகைப்படங்களாக சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்து பலர் அவரை முதலில் ஒழுக்கமாக உடை அணியுமாறு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











